புதுடெல்லி: பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழியாக இருந்தாலும் அது எந்நாளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறை மொழி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறு குழந்தை முதல் வயதானவர்கள் என அனைவரும் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி. பசித்தால் சாப்பிடக்கூட முடியாமல் தொல்லை கொடுக்கும் பல் வலியை சில சுலபமான தீர்வுகளால் கட்டுப்படுத்தலாம். 


பல் வலிக்கு காரணங்கள் என்ன? பல் விளக்காமல் இருப்பது, தவறான பல் துலக்கும் முறை, அதிக அளவிலான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.  


பல்லின் ஈறு பகுதியில் வீங்கியிருந்தாலும், வாயில் பாக்டீரியா தொற்று வந்திருந்தாலும் உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும். மிதமான வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி உப்பைப் போட்டு நன்றாக கலந்து, அதைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா தொற்று இருந்தால் சரியாகும். பல் வலியும் மட்டுப்படும்.


Read Also | அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை!!


மிளகு ஒரு இயற்கையான வலி நிவாரணி.   பற்கூச்சம், வீக்கம், வாய்ப்புண், சொத்தைப்பல் என பல்வேறு பிரச்சனைகளுக்கும் சர்வ ரோக நிவாரணி மிளகு என்று சொன்னால் அது தவறில்லை.  


ஐந்து மிளகு மற்றும் இரண்டு கிராம்பை  பொடியாக்கி, அந்த பொடியை நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்தில் பூசினால் வலி குறையும். அல்லது, ஐந்து மிளகை வாயில் போட்டு மென்று விழுங்கினால், பல் வலி குறையும்.


கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கற்றாழையை எடுத்து, அதன் உட்புறம் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவிய பிறகு பற்களில் தடவவும். கற்றாழை, பற்களில் பாக்டீரியா பரவாமல் தடுத்துவிடும். அதுமட்டுமல்ல, பல் ஈறு வீங்கியிருந்தால் அதையும் கற்றாழையின் சதைப்பகுதி சரி செய்யும்.  கற்றாழையின் உட்புற பசையை எடுத்து ஈறுகளில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.



மிதமான வெந்நீரில் சில சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து கொண்டு, அந்த கரைசலில் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாக்டீரியா அழிவதோடு, அதனால் ஏற்பட்ட பாதிப்பும் சரியாகிவிடும்.
 
இஞ்சியை அரைத்து விழுதாக்கி, அத்துடன் சில பூண்டு பற்களை நசுக்கி இந்தக் கலவையை பற்களில் தடவி ஐந்து நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை கழுவிவிட்டால், அது பாக்டீரியாக்களுக்கு முடிவுகட்டும்.


இப்போது நாங்கள் சொன்ன அனைத்து நிவாரணங்களும் பல் வலிக்கு உடனடித் தீர்வு மட்டுமே. அதீத வலியை மட்டுப்படுத்த மட்டுமே இது உதவும். இதுவே முற்றிலும் தீர்வாக அமையாது. எப்போதுமே பல்லில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.


பல்லில் ஏற்படும் சேதமானது விரைவில் அதிகமாவதோடு, அடுத்து இருக்கும் பற்களையும் விரைவில் சேதப்படுத்திவிடும். பற்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையுடன் இருந்து பல்லையும், அழகையும், சொல்லழகையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.


ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR