நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! ‘இந்த’ பழங்களை உங்கள் உணவில் கட்டாயம் சேருங்கள்

நீரிழிவு நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையின், இனிப்புகளை அதிகம் விரும்புவர்களுக்கு திருப்தியை அளிக்கும் உணவு வகைகளில் பழம் முக்கிய உணவாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2021, 09:13 AM IST
  • நீரிழிவு நோயாளிகள், எந்த பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
  • பப்பாளி இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் கொண்ட சத்துக்களால் நிறைந்துள்ளது.
  • இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக உள்ள பழங்களின் பட்டியல்.
நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு! ‘இந்த’ பழங்களை உங்கள் உணவில் கட்டாயம் சேருங்கள் title=

நீரிழிவு நோயாளிகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையின், இனிப்பு பண்டங்களை அதிகம் விரும்புவர்களுக்கு திருப்தியை அளிக்கும் உணவு வகைகளில் பழம் முக்கிய உணவாகும். நீரிழிவு நோயாளிகள், எந்த பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் போதிலும், எந்த வகை பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து, பொதுவாக பல குழப்பங்களும் ஊகங்களும் உள்ளன. 

பருவகாலத்தில் கிடைக்கும் பழங்கள், உள்நாட்டில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடுவதால், சர்க்கரை அளவைக் குறைப்பது முதல் உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றின் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் இது சாத்தியமாகிறது. பழங்களில் வைட்டமின்கள் A, B, C, E, மற்றும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளதாக உள்ளன. 

லைவ்அல்ட்லைஃப் (LiveAltLife) இணை நிறுவனர் மோனிகா மஞ்சந்தா, நீரழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்களை பட்டியலிட்டுள்ளார். 

ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்

ஆப்பிள்: ஆப்பிள்கள் சத்தானது என்பதோடு, வயிறு நிறையும் வகையிலான உணவாக உள்ளது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. “An apple a day keeps the doctor away” என்ற பழைய பழமொழி உங்களுக்கு நிச்சயம் நினைவுக்கு வரும்.

ஆனைக்கொய்யா (Avocados): ஆனைக்கொய்யா அல்லது வெண்ணெய் பழம் எனப்படும் Avocados ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் 20 க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் சிறந்த பங்காற்றுகிறது.

பெர்ரி (Berries): நீரிழிவு நோய்க்கு உகந்த உணவில் பெர்ரிகளைச் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும். ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றிலிருந்து எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் அவை அனைத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் ஃபைபர்களால் நிரம்பியுள்ளன.

பப்பாளி (Papaya): பப்பாளி இயற்கையான ஆக்ஸிஜனேற்றம் கொண்ட சத்துக்களால் நிறைந்துள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது. உயிரணு சேதத்திற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

விளிம்பிப்பழம் (Star fruit): இனிப்பு மற்றும் புளிப்பு நிறைந்த பழத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

கிவி பழம் (Kiwi fruit): வைட்டமின் ஈ, கே மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாகும்.

முலாம்பழம் மற்றும் தர்பூசணி: நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கும் சக்திவாய்ந்த நீர்ச்சத்து பழங்கள், தர்பூசணி மற்றும் முலாம்பழம் மிகவும் சிறந்தது. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி, மற்றும் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பேரிக்காய் (Pear): பலவிதமான சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை உட்கொள்வது டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆரஞ்சு (Orange): இந்த சிட்ரஸ் பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தை குறைக்க உதவுகிறது, மேலும் இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News