அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை!!

உங்கள் நோய்களை குணப்படுத்தி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும் பவர் கற்றாழைக்கு உள்ளது.

Updated: Jan 6, 2018, 05:18 PM IST
அழகுக்கு மருந்தாகும் சோற்று கற்றாழை!!

கற்றாழை உலகம் முழுவதும் மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.

இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை எனவும் வழங்கப்படுகிறது.

கற்றாழையின் மருத்துவ குணங்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால், கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்திலும் கிடைக்கிறது கற்றாழை. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை எனப் பல வகை இருந்தாலும் இதில் மருத்துவராக செயல்படுவது சோற்றுக் கற்றாழை மட்டுமே.

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் அழகு சாதனப் பொட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது. சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்தி

ரவம் போன்ற கற்றாழையின் ஜெல் கசப்பு தன்மை கொண்டிருந்தாலும், அனைத்து அழகு மற்றும் உடல்நலக் கோளாறு சார்ந்த பிரச்சனைகளுக்கு கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை பொருளாக விளங்குகிறது.

கற்றாழையை நன்றாகத் தோல் சீவி நீரில் கழுவிய பின் அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்று வலி குறையும்சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.

இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

கற்றாழை ஜெல்லை எடுத்து தோலில் அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர தோல் அரிப்பு, கரும்புள்ளி, சுருக்கம், முகப்பருக்கள் மற்றும் அழற்சிகள் நீங்கும்.வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளிக்கதிரின் மூலம் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒருமுறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும்.கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி அதை உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்

மேலும், முகத்தில் உள்ள கரும்புள்ளி தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் போன்ற சருமநோய் எதுவாக இருந்தாலும் கற்றாழைச் சாறை தினமும் தடவி வர குணமாகும்.