Ulutham Paruppu Benefits: எவ்வளவு நன்மைகள்! உளுத்தம் பருப்பு சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருங்க!
Ulutham Paruppu Health Benefits in Tamil: உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உளுத்தம் பருப்பை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ulutham Paruppu Health Benefits in Tamil: உளுந்து அல்லது உளுத்தம் பருப்பு என அழைக்கப்படும் இந்த பருப்பு வகையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன. உளுத்தம் பருப்பில் என்னென்ன சத்துக்கள் இருக்கு என்பதை முதலில் தெரிஞ்சுக்குவோம்.
உளுத்தம் பருப்பில் இருக்கும் சத்துக்கள்
உளுத்தம் பருப்பில் அதிக அளவு புரதம் இருக்கு. அதாவது 100 கிராம் உளுத்தம் பருப்பில் 25 கிராம் அளவுக்கு புரதச்சத்து இருக்கு. பொதுவாகவே உளுத்தம் பருப்புல கால்சியம் சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம் சத்து, மெக்னீசியம், விட்டமின் பி6, காப்பர் மற்றும் அதிகளவு பைபர் அதாவது நார்சத்து போன்ற பல சத்துக்கள் இருக்கு. இந்த அளவுக்கு நிறைய சத்துக்களை உளுத்தம் பருப்பில் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமான உணவாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
உளுத்தம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
தோள்பட்டை வலி, முதுகு வலி, மூட்டு வலி இருப்பவர்கள் உளுத்தம் பருப்பை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது அந்த வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட ஆஸ்டியோபோரோசிஸ் எனக் சொல்லக்கூடிய எலும்பு குறைபாடு மற்றும் எலும்புருக்கி நோய்கள் ஏற்படலாம். அதாவது எலும்பினுடைய அடர்த்தி குறைவதால் எலும்புகளில் வலி ஏற்படும். எந்தவித வேலைகளையும் சரியாக செய்ய முடியாது.
இந்த நோய் இருக்கக்கூடியவர்கள் தினமும் உளுத்தம் பருப்பில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது எலும்பு வலி நோயிலிருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க - இளைஞர்களிடையே அதிகமாகும் கேன்சர்: அலர்டா இருங்க மக்களே
எலும்பு சம்பந்தமான நோய்கள் வரும்போது முடி அதிக அளவு கொட்டும். இந்த பிரச்சனை இருக்கிறவங்க தினமும் உளுத்தம் பருப்பு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து இருப்பதால் முடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
உளுத்தம் பருப்பு உட்கொள்வதால் சீரான செரிமானத்திற்கு உதவிகரமாக இருக்கும். மலச்சிக்கல் போன்ற எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் நீங்கள் ஆரோக்கியமான முறையில் இருக்கலாம்.
உளுத்தம் பருப்புக்கு உடலுக்கு நல்ல வலிமையை தரக்கூடிய சத்து இருக்கு. எனவே உங்களுடைய உடலை ஸ்ட்ராங்காக வச்சுக்கலாம். உளுத்தம் பருப்பில் இருக்கக்கூடிய அதிக அளவு புரதச்சத்து மற்றும் கால்சியம் நம் உடலில் இருக்கக்கூடிய எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்பெற செய்யும். அதனால் உடல் ஸ்ட்ராங்கா ஆரோக்கியமாக இருக்கும்.
முக்கியமாக குழந்தைகளுடைய உடல் வளர்ச்சிக்கு எல்லாம் உளுத்தம் பருப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். சிலர் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்படுவாங்க. அவர்கள் எல்லாம் உளுத்தம் பருப்பை தொடர்ந்து உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலமாக அவங்களுடைய உடல் எடையை எந்தவிதமான பக்கவிளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் அதிகாரிக்கும்.
உளுத்தம் கலி சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை நோயை சீராக வைத்திருக்கும். உளுத்தம் பருப்பு இருக்க கூடிய நார்ச்சத்து சர்க்கரை நோய் அளவை சீராக வைக்கும்.
உளுத்தம் பருப்பில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறதுக்கு உதவியாக இருக்கும்.
உளுத்தம் பருப்பு சாப்பிடுவதால் உடலின் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும்.
உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் உளுத்தம் பருப்பை தொடர்ந்து உங்களுடைய உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுத்தம் பருப்பை சாப்பிட்டு நலமோடு வாழ்க.
மேலும் படிக்க - எச்சரிக்கை.... வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ