கேரட் இலையின் மருத்துவ பண்புகள்: கேரட்டை சாலடுகள், காய்கறிகள், குழம்பு, இனிப்பு, பலகாரம், பாயாசம் என பலவிதமாக சமைத்தோ அல்லது பச்சையாகவோ உட்கொள்கிறோம். பச்சையான கேரட்டுடன் ஒப்பிடும்போது கேரட் ஜூஸில் அதிக பீட்டா கரோட்டின் உள்ளது என்பதால் கேரட் ஜூஸ் குடிப்பதை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் கேரட் இலைகளை யாரும் உண்பதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரட் கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கேரட் இலைகள், கேரட் கீரைகள் என்றும் அழைக்கப்படுகிறது. முன்னதாக, கேரட்டின் இலைகள் விஷம் என்ற தவறான நம்பிக்கை பரவலாக இருந்துவந்தது.


இதற்கு காரணம் அவற்றின் கசப்பான சுவையாக இருக்கலாம். கேரட் இலைகள்ளை ஜூஸ், பொரியல் அல்லது சட்னியாக உட்கொள்ளும்போது அது கேரட்டைப் போலவே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


கேரட் இலைகளின் பல ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்தால் நீங்களும் அவற்றை தூக்கி எறிய மாட்டீர்கள்.


மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் கேரட் நன்மைகள்! நோயே இல்லாம வாழ பெஸ்ட் சாய்ஸ் Carrot 


கேரட் கீரையின் நன்மைகள்


கேரட் இலைகளில் குளோரோபில் உள்ளது, இது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. எனவே, கேரட் இலை சாறு அல்லது சட்னியை தினமும் உட்கொண்டால் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.


கொழுப்பைக் குறைக்கும் கேரட் கீரை
கேரட் கீரையை சமைத்து சாப்பிட்டால், உடலின் நரம்புகளில் படிந்துள்ள கொழுப்பின் அளவு குறையும். இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்பையும் கொண்டுள்ள கேரட் கீரை, இதயம் மற்றும் சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைக்கின்றன.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கேரட் இலைகள்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கேரட் இலைகள் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் தொற்று நோய்களை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.


மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!


வீக்கத்தைத் தடுக்கும் கேரட் இலை


உடலில் புற்றுநோய் அல்லது கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் கேரட் இலைகள் உதவுகின்றன. கேரட் இலைகளை சட்னி அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்வது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் நோய்களிலிருந்து விடுபடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


கேரட் இலையில் நார்ச்சத்து


அதிக அளவு நார்ச்சத்து கொண்ட கேரட் கீரை, நமது வளர்சிதை மாற்றத்தையும் செரிமான அமைப்பையும் நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகின்றன. இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதால் இதயத்திற்கு நல்லது.


பல மூடநம்பிக்கைகள் நமது வாழ்க்கையில் நமக்கு கிடைக்க வேண்டிய பல நன்மைகளை தடுத்துவிடுகின்றன. எனவே மூடநம்பிக்கைகளை தவிர்த்து, அறிவியலை நம்புங்கள். 


மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ


அறிவியலின் படி கேரட் கீரையின் ஆரோக்கிய பண்புகள்


கேரட் கீரை சிறந்த ஆக்ஸிஜனேற்றி 
புற்றுநோய் எதிர்ப்பு திறன் கொண்டது  
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்  
நீரிழிவு எதிர்ப்பு திறன்  
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் 
இதயத்தைப் பாதுகாக்கும்
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் 
கல்லீரல் பாதுகாப்பு திறன் 
சிறுநீரகப் பாதுகாப்பு 
காயங்களை துரிதமாக குணப்படுத்தும் பண்புகள்
நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் 
அழற்சி எதிர்ப்பு திறன் 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | Peanut Harm: எந்த நோய் இருந்தால் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ