புதுடெல்லி: இணையதளங்களில் தரவு கசிவுகள் புதிதல்ல என்றாலும், இந்த கசிவு இந்தியாவில் நடந்து வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடையது என்பதால் பல கேள்விகளை எழுப்புகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ( Covid 19 Vacciination )பாதுகாப்பைப் பெற்ற  ஆயிரக்கணக்கானோரின் தகவல்கள் CoWIN போர்ட்டலில் இருந்து கசிந்து இணையதளங்களுக்கு விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.  இந்த கசிவின் உண்மையை அறிய ஜீ மீடியா முயற்சித்தது.


இணையதளங்களில் தரவு எப்போது கசிந்தது?
இணையதளத்தை ஆய்வு செய்ததில், ஹேக்ஸீஸ் என்ற பயனர் தடுப்பூசி போட்டவர்களின் தரவுகளை  15 ஜனவரி 2022 அன்று மதியம் 12.11 மணியளவில் கசியவிட்டது தெரியவந்தது.


கசிந்த தரவுகளில், தடுப்பூசி போடப்பட்ட சிலரின் மொபைல் எண்கள், ஆதார் அட்டை எண்கள், பான் கார்டு எண்கள், வங்கி பாஸ்புக் எண்கள் மற்றும் அரசாங்க அடையாள அட்டை எண்கள் இருந்தன. இவை தடுப்பூசி மையத்தில் மக்கள் கொடுத்தவை என்று கூறப்படுகிறது.


ALSO READ | மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி


உண்மை சரிபார்ப்பு சோதனை முடிவுகள்
கசிந்த தகவல்களை எங்கள் குழு ஆய்வு செய்தபோது, அந்தத் தரவுகள் ​​சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தில் தடுப்பூசி போட்ட (Covid 19 Vacciination) 8 ஆயிரத்து 685 பேரின் தரவு என்பதும், மொத்தம் 229 பக்கங்கள் கொண்ட இந்தத் தரவுகளில், மகாசமுந்த் மாவட்ட முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியின் கையொப்பம் இருப்பதும் தெரிய வந்தது. 


விற்கப்பட்ட தரவுகள்
'கோவிட் 19 தடுப்பூசிக்கான CoWIN போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட பயனாளிகளின் பட்டியல்' என்ற பெயரில் இந்த விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. CoWIN போர்ட்டலில் இருந்து எடுத்த தகவல்களை பதிவேற்றம் செய்வதற்காக இந்தத் தரவு சேகரிக்கப்பட்டது என்பது தலைப்பிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.  


இந்த உண்மை சரிபார்ப்பு நடவடிக்கைகளின் படி, தடுப்பூசி போடப்பட்டவர்களின் தகவல்கள்  ​​கோவின் போர்ட்டலில் இருந்து தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது.


ALSO READ | பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை! 


முதலில் பார்க்கும்போது, இந்தக் கசிவு கோவின் போர்ட்டலில் இருந்து கசிந்ததாகத் தெரியவில்லை என்றும் சுகாதார அமைச்சகம் ட்வீட் செய்தது. இதனுடன், சுகாதார அமைச்சகமும் இது குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறியிருக்கிற்து.



சத்தீஸ்கரின் மஹாசமுந்த் மாவட்டத்தின் பித்தோரா, பாக்பரா, பஸ்னா, மஹாசமுந்த் மற்றும் சாரிபாலி தொகுதிகளில் 8 ஆயிரத்து 685 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  


கோவிட் தடுப்பூசி தரவுகள் கசிவுகள் தொடர்பான உண்மை சரிபார்ப்பு சோதனையில், தரவுக் கசிவு கோவின் போர்ட்டலில் இருந்து நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது


ALSO READ | Corona: கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR