பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!

கோவிட் தொற்றுக்காக அடிக்கடி பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மோசமாக பாதிப்படையும் என்று ஐரோப்பியாவின் மருத்துவ ஏஜென்ஸி எச்சரித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 06:50 PM IST
  • பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும்போது அதற்கிடையில் அதிகமான கால இடைவெளியை விடவேண்டும்.
  • ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை! title=

கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அடிக்கடி பூஸ்டர் டோஸ் (Booster dose) தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து  ஐரோப்பியாவின் மருத்துவ ஏஜென்ஸி கூறுகையில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ்களை உடலில் செலுத்திக்கொள்வதனால் நம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்கள் அதிகமாக சோர்வடைய நேரிடும்.  அதனால் அதற்கு பதில், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பூஸ்டர் தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்தும்போது அதற்கிடையில் அதிகமான கால இடைவெளியை விடவேண்டும் என்று கூறியுள்ளது.

ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!

தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மக்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த சில நாடுகள் திட்டமிட்டு வருவதால் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் அல்லது நான்காவது பூஸ்டர் டோஸை வழங்க தொடங்கிய முதல் நாடு இஸ்ரேல்.  இவ்வாறு வழங்கப்படும் பூஸ்டர்கள் மக்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதால், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் இங்கிலாந்து கூறியுள்ளது. 

vaccine

பூஸ்டர் தடுப்பூசிகள்  "ஒருமுறை அல்லது இரண்டு முறை செலுத்தலாம், ஆனால் இவற்றை தொடர்ந்து செலுத்துவது கூடாது", உயிரியல் சுகாதார மற்றும் EMA தலைவரான மார்கோ கவலேரி(Marco Cavaleri) கூறுகையில், "நமக்கு தற்போதைய தேவை என்னவென்றால் இப்போதுள்ள கடுமையான தொற்றுநோய் அமைப்பில் இருந்து இயல்பு நிலைக்கு எவ்வாறு மாறலாம் என்பதைப் பற்றிய சிந்தனை தான்."

omicron

Paxlovid மற்றும் Remdesivir போன்ற ஆன்டிவைரல்கள் ஒமிக்ரானுக்கு எதிராக நன்கு செயல்படுகின்றன என்று  EU கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.  மேலும் அந்த நிறுவனம் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் புதிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க முடியும்.  ஏனெனில் இவற்றை முறையாக செயல்படுத்த கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும் என்று கூறியுள்ளனர்.

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News