Corona: கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று!

ஓமிக்ரான் கொரோனாவின் பரம்பரை இல்லை, இது வேறொரு வைரஸ் என்றும், உலகில் ஒரே நேரத்தில் இரண்டு தொற்றுநோய்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சந்தேகப்படுகின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2022, 09:29 AM IST
  • கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லையா?
  • ஒரே நேரத்தில் இரு தொற்றுகள்!
  • பீதி கிளப்பும் வைரஸ்கள்
Corona: கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று!   title=

Corona vs Omicron: ஓமிக்ரான் மற்றும் கொரோனாவுக்கு இடையே உள்ள உறவு மற்றும் வேறுபாடு குறித்து பேசும் விஞ்ஞானிகள் இந்தியாவின் பெருநகரங்களில் மூன்றாவது அலையின் உச்சம், கணிப்புகளைவிட முன்னதாகவே முடிவடையும் கருதுகின்றனர்.

கொரோனா வைரஸின் புதிய வகை ஓமிக்ரான் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில், வைராலஜிஸ்ட் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இதுபற்றிய புதிய கருத்தை தெரிவித்துள்ளார். 

ஓமிக்ரான் கொரோனாவின் பரம்பரை இல்லை, இது வேறொரு வைரஸ் (Coronavirus and Omicron) என்றும், உலகில் ஒரே நேரத்தில் இரண்டு தொற்றுநோய்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சந்தேகப்படுகின்றனர்.

ஓமிக்ரான் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து வேறுபட்டது, எனவே இரண்டு தொற்றுநோய்கள் ஒரே நேரத்தில் உலகை பாதித்திருப்பதாக, அவர் கூறுகிறார்.

ALSO READ | Omicron தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள்

ஓமிக்ரான் கோவிட்-19 இலிருந்து வேறுபட்டது!
வுஹான்-டி614ஜி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, கப்பா  ஆகியவற்றால் ஒமிக்ரான் உருவாக்கப்படவில்லை என்று வைராலஜிஸ்ட் டாக்டர் டி ஜேக்கப் ஜான் உறுதியாக நம்புகிறார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research) வைராலஜியின் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது. 

'என் கருத்துப்படி இது ஒரு வகை அறியப்படாத பரம்பரை, ஆனால் இது வுஹான் D614G உடன் தொடர்புடையது. தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இதைப் பார்க்க முடிகிறது’ என்று அவர் சொல்கிறார்.

ஓமிக்ரான் மற்றும் கொரோனா ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள் வேறுபட்டவை என்று சொல்லும் ஜான், உலகெங்கிலும் உள்ள SARS-CoV-2 வைரஸில் உள்ள புரதத்தில் ஒரு அமினோ அமில மாற்றத்தை D614G காட்டுகிறது என்று கூறுகிறார். 

இந்த இரண்டு வைரஸ்களாலும் ஏற்படும் நோய்களும் வேறுபட்டவை. ஒன்று நிமோனியா-ஹைபோக்ஸியா-மல்டிஆர்கன் பாதிப்பு நோய் (pneumonia-hypoxia-multiorgan), மற்றொன்று சுவாச நோய்.

ALSO READ | கொரோனாவுக்கு அழைப்பு கொடுக்கும் மாஸ்க் மறுபயன்பாடு

மூன்றாவது அலையின் உச்சம் முடிந்துவிட்டதா?  
சில இடங்களில் கொரோனாவின் குறையத் தொடங்கியுள்ளது. எனவே மூன்றாவது அலையின் உச்சகட்டம் தற்போது இறங்குமுகமாகுமா?  என்று கேட்டபோது, ​​​​தொற்றுநோய் முதலில் பெருநகரங்களில் தொடங்கியது என்பதால் அங்கே முதலில் முடிவடையும் என்று ஜான் கூறினார். 

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் காரணமாக கோவிட்-19 தொற்றுநோயின் (Covid Third Wave) மூன்றாவது அலை இந்தியாவில் தொடர்கிறது. நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16, 2022) 2 லட்சத்து 71 ஆயிரத்து பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 743 ஆக உள்ளது.

ALSO READ | Omicron பாதித்த குழந்தைகளில் இருக்கும் தீவிர அறிகுறிகள்: எச்சரிக்கை தேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News