நரம்பு மண்டலத்தை பாதிக்கும் Vitamin B12 குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
வைட்டமின் பி 12 குறைபாடு, நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, மன சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்தும். எனவே, அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவும்.
வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள்: வைட்டமின் பி 12 என்பது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். .ஆனால் இன்றைய நமது பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, நம் உணவில் கவனம் செலுத்த முடியாமல் போவதால், பெரும்பாலானோருக்கு, இந்த முக்கியமான ஊட்டச்சத்து குறைவாகவே உள்ளது. இந்த ஊட்டச்சத்தின் தினசரி தேவையைப் பற்றி குறிப்பிடுகையில், ஆண்களுக்கு 2.4 மைக்ரோகிராம், பெண்களுக்கு 2.6 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 தேவைப்படுகிறது. இந்த சத்து இல்லாததால், உடல் பல வகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள்
1. சோர்வு
உங்கள் உடலில் வைட்டமின் பி 12 குறைவாக இருந்தால், நீங்கள் அடிக்கடி சோர்வாக உணருவீர்கள். உங்கள் உடலின் செல்கள் சரியாக செயல்பட பி12 தேவை. அதன் குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தியைக் குறைக்கும். இது உடலில் ஆக்ஸிஜன் அளவையும் பாதிக்கலாம்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரகம் ஆபத்தான நிலையில் உள்ளதை காட்டும் ‘சில’ அறிகுறிகள்!
2. மஞ்சள் நிற சருமம்
வைட்டமின் பி 12 குறைபாடு காரணமாக, நமது சருமம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது, ஏனெனில், இந்த வைட்டமின் குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதிப்பதால், இரத்த சோகையின் அறிகுறிகள் ஏற்படத் தொடங்குகின்றன. இரத்தம் குறைவதால், தோலின் நிறம் மாறுவதோடு மட்டுமல்லாமல், கண்களின் வெள்ளை நிறமும் மஞ்சள் நிறமாக மாறும். அதிக பிலிரூபின் அளவு காரணமாக, கண்களின் நிறம் மஞ்சளாக மாறுகிறது.
3. தலைவலி
வைட்டமின் பி உடலில் குறையத் தொடங்கும் போது, அது தலைவலி அதிகம் ஏற்படலாம். மேலும் நரம்பியல் சார்ந்த பக்க விளைவுகளும்அதிகரிக்கிறது. இது மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் அதை புறக்கணிக்காமல் மருத்துவரிடம் செல்லவும்.
மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பில் இருந்து தப்பிக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
4. இரைப்பை குடல் பிரச்சினைகள்
வைட்டமின் பி 12 இன் குறைபாடு காரணமாக, வயிற்றில் பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக மருத்தவரிடம் சென்று பரிசோதித்து சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. மன நலம் பாதிப்பு
வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்பதால், அது நமது மனநலத்தையும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நாம் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ