மூளை - நரம்புகளை பாதிக்கும் வைட்டமின் பி12 குறைபாடு... அறிகுறிகளும்... தீர்வைத் தரும் உணவுகளும்
Vitamin B12 Deficiency: மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம ஆகியவற்றுக்கும் அவசியம்.
மருத்துவ மொழியில், சயனோகோபாலமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. மூளையின் சரியான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம ஆகியவற்றுக்கும் அவசியம். உடல் இந்த வைட்டமினை உற்பத்தி செய்யாது என்பதால், உணவின் மூலம்தான் இந்த வைட்டமினை நாம் பெற வேண்டும். ஆகையால் நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் 'தேசிய ஊட்டச்சத்து வாரம்' செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் ஊட்டச்சத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். அத்தகைய சூழ்நிலையில், ESIC (இந்திரா காந்தி) மருத்துவமனையின் மருத்துவர் யுகம் பிரசாத் சாண்டில்யா, வைட்டமின் பி12 ஊட்டசத்தின் தேவை, அதன் குறைபாட்டின் அறிகுறிகள், அதன் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளதை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
ஒருவருக்கு வைட்டமின் பி12 ஊட்டச்சத்து எவ்வளவு தேவை
ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் இயல்பான அளவு 200 pg/mL முதல் 900 pg/mL என்ற அளவில் இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு 300 pg/mL முதல் 350 pg/mL வரை இருக்க வேண்டும். வைட்டமின் பி12 ஊட்டச்சத்தின் அளவு இந்த நிலைக்கு கீழே குறையும் போது, வைட்டமின் பி12 ஊட்டசத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால், பல வகைகளில் உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வைட்டமின் பி-12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்
வைட்டமின் B-12 இன் குறைபாடு காரணமாக மறதி, மனச்சோர்வு, திடீர் எடை இழப்பு, கைகளில் கூச்சம் அல்லது உணர்வின்மை, வாய் புண்கள், மற்றும் பதற்ற உணர்வு போன்ற அறிகுறிகள் காணப்படலாம். இதனுடன் இரத்த சோகை, தலைவலி, சுயநினைவின்மை, கை - கால்களில் வலி, மயக்கம், வாந்தி, கண் பார்வை பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இது தவிர, வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக, மூளை தொடர்பான பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள், எலும்பு பலவீனம் ஆகியவையும் ஏற்படும்.
மேலும் படிக்க | லுடீன் சத்து நிறைந்த மிளகாய்... உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்
வைட்டமின் பி12 குறைபாட்டை தீர்ப்பதற்கான உணவுகள்
வைட்டமின் பி-12 குறைபாட்டைப் போக்க, உங்கள் உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்வது அவசியம். முட்டை, மீன், பால், தயிர், செறிவூட்டப்பட்ட தானியங்கள், பால், சோயா பால், வெண்ணெய் சால்மன் மீன் உணவு,பன்றி இறைச்சி, கல்லீரல் இறைச்சி, ஆகியவை இதில் அடங்கும். இவை அனைத்தும் வைட்டமின் பி-12 ஊட்டச்சத்தின் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.
வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்க சாப்பிடக் கூடாதவை
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, காஃபின் அதிகம் உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் மற்றும் மது பானம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இங்கே குறிப்பிட்டுள்ள உணவுகள் அனைத்தும் உடலில் வைட்டமின் பி12 ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அதன் குறைபாட்டிற்கும் காரணமாகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வைட்டமின் பி-12 குறைபாடு தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது சிறப்பு. வைட்டமின் பி-12 குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதால் பல விதமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ