Niacin Alert To Heart Patients : வைட்டமின் பி-3 அல்லது நியாசின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.  நரம்பு மண்டலம், செரிமான அமைப்பு மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அத்தியாவசியமான இந்த ஊட்டச்சத்தே இதயத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் வைட்டமின் பி3 பற்றிய நேச்சர் மெடிசினில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், அதிக அளவு வைட்டமின் பி மற்றும் இதய நோய்களை அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் பி3 உணவு மூலங்கள்
கல்லீரல், கோழி, மாட்டிறைச்சி, மீன், தானியங்கள், வேர்க்கடலை, பயறுவகைகள் உட்பட பல்வேறு உணவுகளிலும் நியாசின் உள்ளது. இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் முட்டைகளிலுள்ள டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்திலிருந்தும் நியாசின் கிடைக்கிறது.


அதிகப்படியான நியாசின் நுகர்வு என்பது, வீக்கத்தைத் தூண்டுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனர். நியாசின் அதிகமாக உட்கொண்டால், நரம்புகளின் சுவர்கள் தடிமனாக மாறும் என்றும், இதன் விளைவாக தடித்தல் இரத்த ஓட்டத்ம் தடைபட்டு, இதயம் உள்ளிட்ட திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வு அபாய மணி அடிக்கிறது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? கல்லீரல் பாதிப்பிற்கு அதிக வாய்ப்பு.... உஷார்!!


நியாசினுக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த இந்த ஆய்வு, பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல் இதய நோயுடன் தொடர்புடைய சிறிய மூலக்கூறுகளை ஆய்வு செய்ய, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். அதிக நியாசின் உட்கொள்வதால், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இருதய அபாயங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.


இந்த ஆய்வை அடுத்து, எவ்வளவு நியாசின் உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு போதுமானது என்ற அறிவுறுத்தல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.


நியாசின் தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரை
தினமும் 14-18 மி.கி நியாசின் உட்கொண்டால் போதுமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதைவிட அதிகமாக உட்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால், நியாசின் கொண்ட உணவுகளையும் கட்டுப்படுத்தவும்.


நியாசின் சப்ளிமெண்ட்ஸ்


வைட்டமின் பி சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதற்கு முன், மருத்துவரை அணுகுவது அவசியம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நியாசின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கக்கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை வலுவாக்கும் அற்புத பானங்கள்: குடித்தால் குஷியாக வாழலாம்


நியாசின் அதிகமுள்ள உணவுகள்
வைட்டமின் B3 அல்லது நியாசின் ஈஸ்ட், பால், இறைச்சி மற்றும் தானியங்களில் ஏராளமாக இருப்பதால், நியாசின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை/ ஏனெனில் இது உணவின் மூலம் வழங்கப்படுகிறது.


நியாசின் உடலில் அதிகமானால் ஏற்படும் அறிகுறிகள்
முகம் மற்றும் கழுத்தில் சிவந்து போவது
குமட்டல் மற்றும் வாந்தி
தலைவலி
பலவீனம்
கல்லீரல் பாதிப்பு


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி! சிறந்த இனிப்பு போட்டியில் பரிசு எதற்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ