Liver Damage in Diabetic Patients: நீழிவிவு நோய் உலக அளவில் மிக வேகமாக பரவி வருகின்றது. ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அவசர வாழ்க்கை முறை காரணமாக, இன்றளவில் இந்த நோய் பரவலாக காணப்படுகின்றது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இந்த நோய் ஏற்படுகின்றது. இதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். இது மட்டுமின்றி நீரிழிவு நோய் இன்னும் பல கடுமையான நோய்கள் உருவாகவும் காரணமாகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் முதல் கல்லீரல் வரை பல முக்கிய உறுப்புகளில் பல கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும், சில கட்டுப்பாடுகளின் மூலம் கண்டிப்பாக இதை கட்டுக்குள் வைக்க முடியும்.
நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் வாழ்க்கை முறையிலும் பல ஆரோக்கியமான பழக்க வழக்கக்களை பின்பற்ற வேண்டும். உணவு மற்றும் வாழ்க்கை முறை தவிர, நீரிழிவு நோய் உடலின் பல மருத்துவ நிலைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் (Diabetic Patients) கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் அழற்சி மற்றும் பிற கல்லீரல் தொடர்பான அபாயங்களால் அதிகம் சிரமப்படுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சைலண்ட் நோய்களுக்கான ஆபத்து அதிகம்.
ஆகையால், அனைவரும், குறிப்பாக நீரிழிவு (Diabetes) நோயாளிகள், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கல்லீரல் சேதத்திற்கான அறிகுறிகள்
- திடீர் எடை இழப்பு
- தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
- கல்லீரல் (Liver) வீக்க பிரச்சனை
- செரிமானக் கோளாறு
- வயிறு மற்றும் கல்லீரலில் கடுமையான வலி
- டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து
- உடல் சோர்வு
சர்க்கரை நோயாளிகளின் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை தடுப்பது எப்படி?
- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
- எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த கொழுப்பு என்று அழைக்கப்படும் ட்ரைகிளிசரைடுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
- மதுபானம் அருந்த வேண்டாம்.
- புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- ஹெபடைடிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
- உணவில் சிறப்பு கவனம் தேவை
- காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வெண்டும்.
- கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வெண்டும்.
- எடை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும்.
- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கல்லீரல் பாதிப்பை சரி செய்ய முடியுமா?
கல்லீரல் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், விரைவில் சிகிச்சை அளித்து சரி செய்யலாம். கல்லீரல் புதிய திசுக்களை உருவாக்குவதன் மூலம் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும் ஒரு உறுப்பு. இருப்பினும், இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடித்தால், சிரோசிஸ் உருவாகும் ஆபத்து ஏற்படும். ஆகையால், அவ்வப்போது கல்லீரல் செயல்பாட்டை பரிசோதித்து பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தைராய்டு பாதிப்பில் இருந்து தப்பிக்கணுமா? ‘இந்த’ ஜூஸ்களை குடிங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ