அடிவயிற்று தொப்பையை சீக்கிரம் குறைக்கணுமா? இரவு உணவில் இவற்றை உண்ணுங்கள்
Weight Loss Foods: தொப்பையைக் குறைப்பது என்பது பலரைத் தொந்தரவு செய்யும் பிரச்னை. ஆனால் இரவு உணவில் சில பொருட்களை உட்கொள்வதன் மூலம் நீங்கள் உடல் எடையை குறைக்கலாம். அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உடல் எடையைக் குறைக்கும் இரவு உணவு: தொப்பையைக் குறைப்பது என்பது பலரைத் தொந்தரவு செய்யும் பிரச்னை. தொப்பை கொழுப்பு என்பது உங்கள் இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு. அதிகப்படியான தொப்பை கொழுப்பு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உயர் ரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல இதய நோய்கள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். பொதுவாக உடல் எடையை குறைக்கும் போது, மக்கள் உடற்பயிற்சி மற்றும் டயட்டில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். மறுபுறம், ஒரு டயட்டுக்கு, காலை உணவு சத்தானதாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இரவு உணவு லேசாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இரவு உணவை தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே முடித்துவிட வேண்டும், அதனால் உங்கள் தூக்கம் முழுமையடையும். ஆனால் இரவு உணவில் சிலவற்றை உட்கொண்டாலும் உடல் எடையை குறைக்க உதவலாம். அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க இதை செய்யுங்கள்
பாசி பருப்பு தால்
பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். அதன்படி பாசி பருப்பில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் இது டை இழப்புக்கு உதவுகிறது. அதனால் தான் இரவு உணவில் பாசி பருப்பு தால் செய்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | பெண்களே 30 வயது கடந்துவிட்டீர்களா? இந்த மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..!
ஜவ்வரிசி கஞ்சி
உடலை குளிர்ச்சி அடைய வைப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல் ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. அந்த வகையில் தினசரி இரவு உணவில் ஜவ்வரிசி கஞ்சியை உட்கொண்டால், உங்கள் எடையை எளிதில் குறைக்கலாம்.
பப்பாளி
நாம் இரவு சாப்பாட்டுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்ல விஷயம். அதற்காக பப்பாளி சாப்பிடுவது இன்னும் நல்ல விஷயம் ஏனென்றால் பப்பாளிகள் பப்பேன் என்ற விஷயம் ஒரு நொதிப்பொருள் உள்ளது. இது நம் உடம்பில் இருக்கும் வாயு, மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பப்பாளி உதவுகிறது.
சுரக்காய்
சுரைக்காயை இரவு உணவாக எடுத்துக்கொண்டு நம் உடல் இரவு குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் சுரக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட் நாம் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் உதவும். நாம் சுரைக்காயை சாப்பிடுவதால் நாம் உடலில் எண்ணற்ற ஆரோக்கிய சத்துக்கள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இந்த பச்சை நிறப் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ