இவைதான் நீரிழிவு நோயின் அபாய அறிகுறிகள்...புறக்கணித்தால் ஆபத்து!!
Diabetes Symptoms: நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உட்கொள்ளும் உணவு, அறிகுறிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பலரை வாட்டி வருகின்றது. இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தியாவின் புள்ளிவிவரங்களை மட்டும் பார்த்தால், 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர். அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இவர்கள் சிரமத்தில் உள்ளனர். நீரிழிவு நோய் நூற்றுக்கணக்கான நோய்களைத் தோற்றுவிப்பதோடு, உடல் உறுப்புகளையும் கெடுக்கும் அளவுக்கு ஆபத்தானது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உட்கொள்ளும் உணவு, அறிகுறிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
தோல் கருப்பது
நீரிழிவு நோயின் ஆரம்பகால அறிகுறிகளில், இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக, உடலின் பல பாகங்கள் கருப்பாக மாறும். குறிப்பாக கழுத்து, கண்களுக்குக் கீழே மற்றும் கைகளுக்குக் கீழ் உள்ள இடங்கள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறத் தொடங்கும்.
கண்பார்வை பாதிக்கப்படும்
உங்கள் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, அதன் தாக்கம் கண்களில் தெரிய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கலாகத் தொடங்கும். ஆரம்ப கட்டத்தில், ஊசியில் நூல் கோர்ப்பதில் சிரமம். ஏற்கனவே கண்ணாடி அணிந்திருந்தால் அதற்கான நம்பர் அதிகரிகக் வாய்ப்புள்ளது.
கை கால்களில் கூச்சம்
கை, கால்கள் மரத்துப் போவதும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும். ஏனெனில் இந்த நோயில் உடலின் நரம்புகள் பலவீனமடைகின்றன. மேலும் இரத்தம் நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குச் செல்லாதபோது, அதில் அல்லது உடல் பாகங்களில் கூச்சம் ஏற்படுகிறது. உணர்வின்மை தொடங்குகிறது.
மேலும் படிக்க | தினசரி புல்கர் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
சிறுநீரக பிரச்சினைகள்
சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு நீரிழிவு நோயும் ஒரு முக்கிய காரணம். உண்மையில், அதிக சர்க்கரை காரணமாக, சிறுநீரக செயல்பாடு மோசமடைகிறது மற்றும் இது அடிக்கடி சிறுநீர் கழித்தல், கணுக்கால் வீக்கம் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஈறுகளில் இரத்தப்போக்கு
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஈறுகளில் இரத்தப்போக்கு, வாய் துர்நாற்றம், தளர்வான பற்கள் மற்றும் மோசமான வாய் ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
காயங்கள் குணமாவதில் தாமதம்
உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, காயங்கள் குணமாக நீண்ட நேரம் எடுக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறியை நாம் புறக்கணிக்கக்கூடாது. ஏனென்றால் இது காயத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கால்களில் தோறும் அறிகுறிகள்
- நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு டயபடிக் நியூரோபதி நோய் வரக்கூடும். இதில் நரம்புகள் சேதமடைகின்றன. இதன் காரணமாக பாதங்களில் கூரான வலியும் வீக்கமும் ஏற்படும். சில சமயங்களில் பாதங்கள் மரத்துப் போகும்.
- சர்க்கரை நோய் தாக்கினால், கால் நகங்களின் நிறம் மாறுகிறது. பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் நமது நகங்கள் திடீரென்று கருப்பாக மாறும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
- நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், உங்கள் கால்கள் மற்றும் உள்ளங்கால்களில் உள்ள தோல் கடினமடையத் தொடங்குகிறது, இருப்பினும் இது தவறான அளவு காலணிகளை அணிவதாலும் நிகழலாம். எனினும் இரத்த சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
- காலில் புண் ஏற்பட்டால், பாதங்களில் காயங்கள் தோன்ற ஆரம்பித்து, சில சமயங்களில் தோலும் வெளிவர ஆரம்பிக்கும். இந்த நோய் வரம்புக்கு அப்பால் அதிகரித்தால், மருத்துவர் காலை துண்டிக்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படும். ஆகையால், இந்த அறிகுறியை கண்டால் உடனே பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நினைத்துக் கூட பார்க்காத முடியாத நன்மைகளை தரும் 5 யோகாசனங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ