சட்டுபுட்டுன்னு சக்கரையைக் குறைக்கும் பழம்! தாட்பூட் பழத்தின் மருத்துவ குணங்கள்

Diabetes Control Fruit: நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல, சில உணவுகளை அவசியமாக தினசரி அடிப்படையில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்தப் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் வல்லது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 31, 2023, 06:48 AM IST
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழம்
  • தாட்பூட் பழத்தின் மற்றொரு பெயர் தெரியுமா?
  • நீரிழிவு கட்டுபாட்டில் பழங்களின் பங்கு
சட்டுபுட்டுன்னு சக்கரையைக் குறைக்கும் பழம்! தாட்பூட் பழத்தின் மருத்துவ குணங்கள் title=

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த மஞ்சள் நிறப் பழத்தை சாப்பிடத் தொடங்குங்கள், சில நாட்களில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு என்பது ஒரு ஆபத்தான நோயாகும், இது படிப்படியாக உடலை சீர்குலைக்கிறது. இதைத் தவிர்க்க, உணவுக் கட்டுப்பாடும், சில உணவுகளை அன்றாடம் உண்பதும் அவசியம் ஆகும். உலகில் மிக வேகமாக உருவாகும் நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இது ஒரு வாழ்க்கை முறை தொடர்பான நோய், இது ஒருமுறை ஆரம்பித்தால் குணப்படுத்திவிட முடியாது, கட்டுப்படுத்தத்தான் முடியும்.

சில நடவடிக்கைகள் மற்றும் மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் இந்த வாழ்நாள் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் நோயை கட்டுக்குள் வைக்க, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய தவறு கூட உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தாகக் கருதப்படும் மஞ்சள் நிறப் பழத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் இந்த அதிசய பழத்தின் பெயர் தாட்பூட் பழம். இந்த பழத்தைப் பற்றி வெகு சிலரே அறிந்திருப்பார்கள். இந்தப் பழம், Passion fruit என்று அறியப்படுகிறது. சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் இந்தப் பழத்தில் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை இருக்கும்.  இந்த மஞ்சள் நிற பழத்தின் பிறப்பிடம் பிரேசில். அங்கிருந்து உலகின் மற்ற நாடுகளை சென்றடைந்துள்ளது.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு

இந்த பழத்தில் (Passion Fruit) பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இதன் காரணமாக இது ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பொக்கிஷமாக மாறுகிறது. இப்பழம் மட்டுமின்றி இதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. கொடித்தோடை என்றும் அழைக்கப்படும் ‘பேஷன் ஃப்ரூட்’ பழத்தில், கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக அதை உட்கொண்டாலும் உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

தாட்பூட் பழத்தின் தோலில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழத்தை (Passion Fruit) சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், உணவு பழக்க வழக்கங்களில் சரியான கவனம் செலுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. உங்களுக்கும் நீரிழிவு பிரச்சனை இருந்தால் இந்த பழத்தை நீங்கள் முயற்சி செய்யலாம்.

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News