கொலஸ்ட்ரால் அபாயம்-கைகளில் தெரியும் அறிகுறிகள்: இந்த நவீன வாழ்க்கை முறையில், அனைத்து பணிகளையும் அவசரமே ஆக்கிரமித்துள்ளது. இந்த அவசர வாழ்க்கை முறை காரணமாக நாம் பல வித நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறோம். உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேருவதும் உடலில் ஏற்படும் ஒரு மிகப்பெரிய அபாயமாகும். பலருக்கு கொலஸ்ட்ரால் அளவு மிக அதிகமாக உள்ளது. ஆனால், பல முறை இதன் அறிகுறிகள் நமக்குத் தெரிவதில்லை. கைகளில் கூச்சம் அல்லது உணர்வின்மை இருந்தால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் உயர் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை கைகளின் சில அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆகையால் கைகளில் குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், ரத்த ஓட்டம் கெட்டியாகி, அதன் தாக்கம் கைகளில் தெரியும்.


லிபிட் ப்ரொஃபைல் சோதனை (Lipid Profile Test) மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை எளிதில் கண்டறியலாம். இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை, சோதனைகள் இல்லாமல் நாம் முற்றிலும் தெரிந்துகொள்ள முடியாது என்பதும் இல்லை. உங்கள் கைகளில் சில மாற்றங்களைக் கண்டால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உங்கள் கையில் சில பிரச்சனைகள் ஏற்படும். இவற்றின் மூலம், நீங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்பதை கண்டறியலாம். 


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பை தொலைந்து, உடல் எடை குறையணுமா? இந்த சார்டை பின்பற்றினால் போதும் 


கைகளில் கூச்சம்


உடலின் எந்தப் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒரே இடத்தில் சேரத் தொடங்கினாலும், இரத்த ஓட்டம் நின்றுவிட்டாலும், நரம்புகளிலும் அடைப்பு தொடங்குகிறது. இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி (Atherosclerosis ) என்று அழைக்கப்படுகிறது. உங்கள் இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்யாதபோது, ​​உங்கள் கைக்கு இரத்த ஓட்டம் குறைந்து, கடுமையான வலி அல்லது கை கூச்சத்தை ஏற்படுத்துகிறது.


மஞ்சள் நகங்கள்


நகங்களின் நிறம் மஞ்சளானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


கைகளில் வலி


உங்கள் தமனிகளில் பிளேக் குவிந்தால், அது தமனிகளை பிளாக் செய்கிறது. ஒரே இடத்தில் குவியும் இவை, கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள், செல்லுலார் கழிவுப் பொருட்கள், கால்சியம் மற்றும் ஃபைப்ரின் ஆகியவற்றால் ஆனவை. உடல் அதிக கொலஸ்ட்ராலை உருவாக்கும் போது, இவை கைகைகளின் இரத்த நாளங்களை அடைத்து, கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.


இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் உடலிலும் தென்பட்டால், உடனடியாக கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து, அதற்கான சிகிச்சையை பெறவும். இல்லையெனில் மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ