கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் தோன்றும்: உங்கள் உணவில் எண்ணெய் நிறைந்த பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால், அது ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இதனால் உங்களுக்கு மாரடைப்பு மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்கள் வரக்கூடும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழிமுறைகள் உள்ளன, அவை உங்கள் உடலில் இருக்கும் உயர் கொலஸ்ட்ரால் அளவை அதிகமாக்காமல் வைத்திருக்க உதவும். அவை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
உயர் கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இதயத்திற்கு அருகில் உள்ள தமனிகளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது, இது இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்த தொடங்குகிறது, மேலும் இதனால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. அத்துடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர, நாம் தினசரி உடற்பயிற்சியும் செய்ய வேண்டும், இல்லையெனில் கலோரிகள் எரிக்கப்படாது உடலின் நரம்புகளில் கெட்ட கொழுப்பு சேரத் தொடங்கும்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?
* கொலஸ்ட்ரால் அதிகரிப்பு லிப்பிட் ப்ரொஃபைல் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
* இதயத்தின் தமனிகள் எவ்வளவு தடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆஞ்சியோகிராபி காட்டுகிறது.
* மூளையில் அடைப்பு ஏற்பட்டால், மூளை நரம்புகளில் ஆஞ்சியோகிராபி செய்யப்படும்.
கொலஸ்ட்ரால் சிக்கலை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பார்ப்போம்?
உடல் பருமன் அதிகரிப்பதை நிறுத்த வேண்டுமானால், இன்றிலிருந்து ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் சாப்பிடத் தொடங்குங்கள். இது மருத்துவ மொழியில் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது எச்.டி.எல் என்று அழைக்கப்படுகிறது. இதன் நுகர்வு மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கிறது
- இறைச்சி பொருட்கள்
- வெண்ணெய்
- வறுத்த உணவுகள்
- துரித உணவு
- ஜன்க் உணவு
- சீஸ்
- சர்க்கரை
- சீஸ் பர்கர்
- பால்
நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த டாப் 10 உணவுகள்
- சோயாபீன்
- ஓட்ஸ்
- பீன்ஸ்
- பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்
- வெண்டைக்காய்
- நட்ஸ்
- ஆலிவ் எண்ணெய்
- சால்மன் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள்
- அவகேடோ
- ரெட் ஒயின்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை மட்டும் தவறாமல் சாப்பிடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ