உடலை நீரேற்றமாக வைத்திருக்க அல்லது உடல் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிப்பது சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது.  ஆனால் தேவைக்கும் அதிகமான நீர் உட்கொள்வது எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  மிக அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்று நீர் எடை. இதனால் ஆபத்தான உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீர் எடை என்றால் என்ன?


உடலில் நீரின் அளவு அதிகமாகும்போது, ​​உங்கள் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. இது நீர் எடை அல்லது நீர்ச்சத்து எடை  என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை பல காரணங்களால் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் உடல் செயல்பாடு இல்லாமை, நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வது அல்லது கர்ப்ப காலத்தில் கூட இது போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன.


நீர் எடையினால் ஏற்படும் பிரச்சனைகள்


உடலில் அதிகப்படியான நீரின் காரணமாக,  வயிற்று வலி, உடல் உறுப்புகளில் வீக்கம் அல்லது தொப்பை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இது தவிர, உடலில் நீர்ச்சத்து அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, ​​சோடியத்தின் அளவு வேகமாகக் குறையத் தொடங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. சோடியம் அளவு குறைவது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது ஆபத்தான கட்டமாகும். இது ஹைப்போட்ரிமியாவின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.


மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கும் ‘சந்தன எண்ணெய்’; பயன்படுத்தும் எளிய வழிகள்!


போதுமான தண்ணீர் சத்து உடலில் இருந்தால், மிக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நால் ஒன்றுக்கு 2 லிட்டர் தண்ணீர் போதுமானது. உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து உடலில்  உள்ளதா அல்லது நீர்ச்சத்து குறைவாக உள்ளதா என்பதை கீழ்கண்ட அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். 


உலர்ந்த சருமம்


உடலில் தண்ணீர் இல்லாததால், நம் தோல் வறண்டு போக ஆரம்பித்து, உதடுகள் உதிர்கின்றன.


நெஞ்செரிச்சல்


உடலில் தண்ணீர் இல்லாததால் மார்பில் லேசான எரியும் உணர்வு, அமிலத்தன்மை அல்லது வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்.


தசைப்பிடிப்பு


தண்ணீர் இல்லாததால் தசை வலி, பிடிப்புகள்  ஏற்படலாம். இதனுடன், தலையில் தொடர்ந்து வலி  இருக்கலாம்


ஹலிடோசிஸ் பிரச்சனை


தண்ணீர் இல்லாததால், வாயில் போதுமான அளவு உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை, இது வாயின் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், வாயில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, வாயிலிருந்து துர்நாற்றம் வரத் தொடங்குகிறது.


சிறுநீர் பிரச்சினைகள்


உங்கள் சிறுநீரின் நிறம் காலப்போக்கில் அடர்த்தியாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இருந்தால், அது உடலில் நீர் பற்றாக்குறையின் அறிகுறியாகும். இது தவிர, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், சிறுநீரின் அளவு குறைந்து, அதில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு பிரச்சனை ஏற்படலாம்.


அதாவது, உங்கள் உடலில்  மேலே கூறப்பட்டுள்ளது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, தண்ணீர் உட்கொள்வதை அதிகரிக்கவும். இல்லையெனில், ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 2 முதல் அல்லது அதிக பட்சமாக 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானதாக கருதப்படுகிறது. இதற்கு மிஞ்சிய அளவில் தண்ணீர் தேவையில்லை.


மேலும் படிக்க | Health Alert: குளிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR