Weight Gain Diet Tips: தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் மிகவும் சிரமப்படுபவர்கள் பலர் உள்ளனர், அதே சமயம் எடை அதிகரிக்காத பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். அதன்படி இதில் எடை இழப்பவர்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். இதற்கு, உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் உண்டு. நீங்களும் உங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், உங்கள் உணவில் என்னென்ன விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று நாங்கள் உங்களுக்குச் கூற உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உருளைக்கிழங்கு: நீங்கள் எடை அதிகரிக்க (Weight Gain Tips) விரும்பினால், உங்கள் உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளலாம். நல்ல அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் இதில் உள்ளன, இவை நல்ல ஆரோக்கியமான (Healthy Foods) எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.


ALSO READ: பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதா? வறுத்து சாப்பிடுவதா? எதில் நன்மைகள் அதிகம்? 


பாதாம்: பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது எடை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு 3 முதல் 4 பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து மறுநாள் அரைத்து பாலில் கலந்து குடிக்கவும். இப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.


வாழைப்பழம்: இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால், வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக கலோரி உள்ளடக்கம் உள்ளது. காலை உணவில் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


நெய்: நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது எடையை அதிகரிக்க உதவுகிறது. நெய்யில் நல்ல அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன, இது எடையை அதிகரிக்க உதவுகிறது. இதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR