உடல் எடையை குறைக்கணுமா? இந்த 7 விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்!
உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதால் பசியும் கட்டுப்படுகிறது, செரிமானமும் சிறப்படைந்து உடல் எடையும் குறைகிறது.
உடல் செயல்பாடு, உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணிகள் உடல் எடை குறைப்பில் முக்கிய காரணியாக இருக்கின்றது. கூடுதலாக வயது, பாலினம் மற்றும் பிற பண்புகள் உங்கள் சிறந்த உடல் எடையைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு புத்தாண்டிலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான் பலரின் முதன்மையான தீர்மானமாக இருக்கின்றது. அதன்படி இந்த 2023ம் ஆண்டில் நீங்கள் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.
1) உணவை வேகவேகமாக சாப்பிடாமல் மெதுவாக சாப்பிடுங்கள், ஒவ்வொரு உணவையும் நன்கு மென்று சுவைத்து விழுங்க வேண்டும். உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதால் பசியும் கட்டுப்படுகிறது, செரிமானமும் சிறப்படைந்து உடல் எடையும் குறைகிறது.
2) புரத உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவான உணர்வை கொடுக்கிறது. விரைவாக உடல் எடையை குறைக்க இது ஒரு சிறப்பான வழியாகும், இதனால் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவுகள் குறைந்துவிடும். மீன், தயிர், பருப்பு மற்றும் பாதாம் ஆகியவை சிறந்த புரத சத்தை உங்களுக்கு கொடுக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்
3) செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட இனிப்பு பானங்களுக்கு பதிலாக நீங்கள் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது உடல் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலை தவிர்ப்பதோடு, உடை எடை குறைப்பிற்கு வழிவகுக்கும்.
4) உடல் எடையை குறிக்க விரும்புபவர்கள் இரவில் சரியான தூக்கத்தை பெற வேண்டியது அவசியம். இரவில் போதுமான அளவு தூக்கமில்லையென்றால் உடல் எடை கூடி விடும். எனவே சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டியது அவசியம்.
5) உடல் எடையை குறிக்க வேண்டும் என்பதற்காக உணவை தவிர்க்க கூடாது, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பலரும் செய்யும் முட்டாள்தனம் உணவை தவிர்ப்பது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
6) சாப்பிடுவதற்கு முன்னர் இரண்டு க்ளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும். சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் உங்கள் பசி கட்டுப்படும் மற்றும் உடல் எடையும் குறையும்.
7) ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் பளுதூக்குவது உங்கள் தசைகளுக்கு நல்லது. 10 முதல் 15 தடவை 3 செட் அல்லது 4 செட் கணக்கில் நீங்கள் பயிற்சியை செய்தால் தசைகள் வலுப்பெற்று உடல் எடை குறையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ