உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது கொழுப்புச் சத்து. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், முதலில் தவிர்ப்பது கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளைத்தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் கொழுப்பு இல்லாத உணவு மட்டுமே பருமனை கூட்டவோ, குறைக்கவோ உதவாது. உணவு உண்பதில் மாற்றங்கள் செய்தும், உடற்பயிற்சிகளை முறையாக செய்தாலும்கூட உடல் பருமன் பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை.


உண்ணும் உணவில் எதை சேர்க்க வேண்டும் எதை குறைக்க வேண்டும் என்பதை சுகாதார ஆலோசகர் தான் முடிவு செய்ய வேண்டும். 


ஆனால், பலர் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவு முறையை பின்பற்றினால், உடல் எடையை (Weight Loss) பராமரிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.


மேலும் படிக்க | பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்?


சர்க்கரை கலநத உணவுகள், ரொட்டி போன்றவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை குறைந்த அளவில் உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைப்பதற்கு ஆரம்ப ஆய்வுகள் பச்சைக்கொடி காட்டின.


உண்மையில் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொள்வது ஒருவரின்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதா என்றால் அதற்கு சரியான பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், ஒருவருக்கு ஒத்துப் போவது, மற்றொருவருக்கு சரி வராது. 


எனவே எடை குறைக்க முயற்சிக்கும் ஒருவருக்கு குறைந்த கார்ப் உணவை உட்கொள்வது நன்மை பயக்குமா? என்ற கேள்வி எழுகிறது.



குறைந்த கார்ப் உணவு எடை இழப்புக்கு நல்லதா?
முறையான மதிப்பாய்வுகளின் காக்ரேன் தரவுத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வில், குறைந்த கார்ப் உணவை உட்கொள்பவர்கள், சீரான கார்ப் டயட்டில் இருப்பவர்களை விட ஒரு கிலோ அதிகமாக இழந்துள்ளனர். 


பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ளத் தவறுவது என்னவென்றால், நீங்கள் குறைந்த அளவு கார்ப்போஹைட்ரேட் உணவு முறையை பின்பற்றினால், உடலுக்குத் தேவையான பிற அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என ஊட்டச்சத்துக்களை, வேறு ஏதேனும் வழியில் உணவில் சேர்க்க வேண்டும்.


ஆய்விற்காக, 61 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளில்அதிக உடல் எடை கொண்ட கிட்டத்தட்ட 7,000 நபர்களை ஆராய்ச்சியாளர்கள் சேர்த்துள்ளனர். இதில், 1,800 பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் உருவானது. ஆரோக்கியமான எடை வரம்பிற்குள் இருந்தவர்கள் விலக்கப்பட்டனர்.


மேலும் படிக்க | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!


3 முதல் 8.5 மாதங்கள் குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றிய கூடுதல் உடல் எடை கொண்டவர்கள். சமச்சீரான கார்ப் உணவைப் பின்பற்றியவர்களை விட ஒரு கிலோகிராம் அதிகமாக இழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 


ஓரே மாதிரியான உணவுத் திட்டங்களை வழங்குவதன் மூலம் இரு குழுக்களிலும் ஆற்றல் உட்கொள்ளும் வரம்புகள் ஒரே மாதிரியாக இருப்பதை அவர்கள்  உறுதிப்படுத்தியபோது வித்தியாசம், தோராயமாக அரை கிலோ என்ற அளவில் குறைந்தது. 


இந்த ஆய்வின்படி, சமச்சீர் கார்ப் உணவுகளை விட, குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் ஆரம்ப எடை இழப்பை அதிகப்படுத்தியத, இது மூன்று முதல் ஆறு மாதங்களில் 1.3 கிலோவாக இருந்தது. 


இருப்பினும், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்த நீண்ட சிகிச்சைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. எடை இழப்பு ஆய்வின் முடிவில், டைப்  2 நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும், சரி, நீரிழிவு இல்லாதவரகளாக இருந்தாலும் சரி, எடை குறைப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


இரத்த அழுத்தம், கொழுப்பு, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மலச்சிக்கல் ஆபத்து போன்ற பிற சுகாதார குறிகாட்டிகளும், வேறு எந்த குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டவில்லை. தனிநபர்களிடையே கார்ப் கட்டுப்பாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளில் குறிப்பிடத்தக்க மருத்துவ வேறுபாடுகள் எதுவும் இல்லை.


மேலும் படிக்க | இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!


குறைந்த கார்ப் உணவுக்கு செல்வது ஆபத்து
உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலில் ஏற்படுத்தும் திடீர் மாற்றமானது, மலச்சிக்கல், தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு உள்ளிட்ட தற்காலிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.


மேலும், மூச்சுத் திணறல், தலைவலி, சோர்வு மற்றும் பலவீனம் ஆகியவை அடங்கும். குறைந்த கார்ப் உணவு என்ன வகையான நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாக இல்லை.


நீண்ட கால கார்போஹைட்ரேட் கட்டுப்பாடு வைட்டமின் மற்றும் தாது பற்றாக்குறை மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். விலங்குகளில் இருந்து கொழுப்பு மற்றும் புரதம் நிறைய சாப்பிடுவது இதய நோய் மற்றும் சில வீரியம் மிக்க உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம் என்று சில சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


உணவின் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்ள உதவும் சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசுவதே ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி. 


மேலும் படிக்க | தொப்பையை வேகமாக கரைக்கும் ‘மேஜிக்’ட்ரிங்க்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR