7 நாளில் எடையை குறைக்க இந்த டயட்டை ட்ரை பண்ணுங்க
Weight Control Tips: உடல் எடையை அதிகரிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசன விளைவை ஏற்படுத்தி தரும். எனவே ராணுவத்தினரின் மிலிட்டரி டயட்டை பின்பற்றுவதன் மூலம் வெறும் ஒரே வாரத்தில் 4 கிலோ வரைஎடையைக் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க நிறைய முயற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் போகிறது. உடல் எடையை அதிகரிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசன விளைவை ஏற்படுத்தி தரும். உடல் பருமன் ஒரு நோயல்ல, ஆனால் இது பல வித நோய்களுக்கு ஆதாரமாக மாறக்கூடும்.எனவே உடல் எடையால் சிரமம் படுபவர்களுக்கு மிலிட்டர் டய்ட் என்று ஒன்று உள்ளது. இதை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கட்டாயம் ஒரு வாரத்தில் நான்கு முதல் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.
இந்த உணவு முறையை ட்ரை செய்யுங்க
மிலிட்டரி டயட் அதாவது இராணுவ உணவு நாட்டின் வீரர்களுக்காக பிரத்தியேகமாக சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில், இராணுவர்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்கும் இலக்கை அடையலாம். இந்த உணவின் மிகவும் சிறப்பு விஷயம் என்னவென்றால், அதில் மிகவும் விலையுயர்ந்த கூடுதல் பொருட்கள் இல்லை என்பது தான்.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
பொதுவாக நமது உடல் எடை இழப்புக்கு டயட் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, இராணுவ உணவு இந்த வழியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவில், ஒரு நபர் வாரத்தின் 3 நாட்களில் குறைந்த கலோரி ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டியிருக்கும், மீதமுள்ள 4 நாட்கள் இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டியதில்லை. நீங்கள் உடல் எடையை குறைக்கும் வரை இந்த உணவை பின்பற்ற வேண்டும்.
1. இந்த உணவின் சிறப்பு என்னவென்றால், இது உங்கள் உடலின் கொழுப்பை எரிக்கிறது மற்றும் மெட்டபாலிஸத்தை, அதாவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதன்படி இது உங்கள் எடையை குறைக்க எளிதில் உதவுகிறது.
2. வாரத்தில் 3 நாட்கள் இந்த உணவில் முறையை பின்பற்றும் போது, நீங்கள் 1300 முதல் 1500 கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, கார்போ ஹைட்ரேட்டின் அளவை மிகக் குறைவாக வைத்திருக்க வேண்டும்.
3. இந்த உணவில் நீங்கள் குளிர்ந்த பானங்கள், பழம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியதில்லை, இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவில், நீங்கள் அதிகபட்ச மாக திரவ உணவை உட்கொள்ள வேண்டும்.
4. நீங்கள் இராணுவ உணவைப் பின்பற்றுகிறீர்கள் என்றால், 20 நிமிடங்கள் நடந்தால் போதும், நீங்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.
மிலிட்டரி டயட்டின் டயட் சார்ட்
முதல் நாள் அன்று காலை உணவில் 1/2 கப் திராட்சை, 1 பிரட் டோஸ்ட் ஸ்லைஸ், 2 டீஸ்பூன் பீனட் பட்டர் மற்றும் சர்க்கரை இல்லாமல் தேநீர் அல்லது காபி ஆகியவை அடங்கும். மதிய உணவில் 1/2 கப் சமைத்த மீன், 1 பிரட் துண்டு, காபி அல்லது தேநீர் அதேபோல் இரவு உணவில் இறைச்சியின் 2 துண்டுகள், 1 கப் பச்சை பீன்ஸ், 1/2 வாழைப்பழம், 1 சிறிய ஆப்பிள் மற்றும் 1 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆகியவை அடங்கும்.
இரண்டாம் நாளில் காலை உணவில் 1 முட்டை, 1 பிரட் டோஸ்ட் துண்டு, 1/2 வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவில் 1 கப் பாலாடைக்கட்டி அல்லது 1 துண்டு செட்டார் சீஸ், 1 வேகவைத்த முட்டை, 5 உப்பு பிஸ்கெட்டுகளும், இரவு உணவில் 2 ஹாட் டாக், 1 கப் ப்ரோக்கோலி, 1/2 கப் கேரட், 1/2 வாழைப்பழம் மற்றும் 1/2 கப் வெண்ணிலா ஐஸ்கிரீமை எடுத்துக்கொள்ளலாம்.
மூன்றாம் நாள் அன்று காலை உணவாக 5 பிஸ்கெட்டுகள், 1 துண்டு செட்டார் சீஸ், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு வேகவைத்த முட்டை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம், மதிய உணவில் 1 பிரெட் துண்டும், இரவு உணவில் 1 கப் மீன், 1/2 வாழைப்பழம், 1 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ