உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க,  சிறந்த  டயட் மிகவும் முக்கியம்.  உணவில் அஜாக்கிரதையாக இருந்தால், பல நோய்கள் உங்களைச் சூழ்ந்துவிடும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க படாத பாடு பட்டாலும் எடை குறையவில்லையே என வருந்துபவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு எலுமிச்சை, இஞ்சி மஞ்சள் கலந்த டிரிங்க் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதை உட்கொள்வதன் மூலம், நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். அதே சமயம், உங்கள் எடையையும் எளிதாகக் குறைக்கலாம். மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது


தற்போதைய கால கட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் அவசியம். அத்தகைய சூழ்நிலையில் மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீரை உட்கொண்டால்,  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெரிதும் அதிகரிக்கும். எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், இது சாத்தியமாகிறது. மஞ்சள் உடலின் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே தினமும் இதனை உட்கொள்ளலாம்.


சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கும் நன்மை பயக்கும்


மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி நீர் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுத் தனமையை நீக்க உதவுகிறது. எனவே தினமும் காலையில் இந்த பானத்தை உட்கொண்டு நன்மை அடையலாம்.


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


எடை இழப்பு


தினமும் மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.


மஞ்சள், எலுமிச்சை மற்றும் இஞ்சி ட்ரிங்கை தயார் செய்யும் முறை


இஞ்சி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை ட்ரிங்கை தயார் செய்ய, முதலில் நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து, அதில் ஒரு துண்டு இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். இப்போது சிறிது ஆறிய பிறகு டீ அல்லது காபி போல் குடிக்கவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ