சீக்கிரமா உடல் எடையை குறையணுமா? இந்த பானம் ஒன்று போதும்
Belly Fat Burning Tips: உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான பணியாகும், ஆனால் ஒரு சிறப்பு விஷயத்தின் உதவியுடன், தட்டையான வயிற்றைக் நீங்கள் ஒரே வாரத்தில் பெறலாம்.
எடை இழப்புக்கு இளநீர்: இன்றைய அதிவேக காலத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. அதிக உடல் எடை காரணமாக அதிக கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, நாம் உண்ணும் உணவில் அதிக கட்டுப்பாடு தேவை. எதை உட்கொள்ள வெண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.
அதேபோல் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்கும் போது, உடலின் ஒட்டுமொத்த வடிவம் மோசமடைகிறது, இதன் காரணமாக ஒருவர் பல முறை சங்கடத்தையும் குறைந்த நம்பிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே நீங்கள் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்றால் இந்த பானத்தை குடிக்கத் தொடங்குங்கள்.
உடல் எடையை குறைக்க இந்த இயற்கை பானத்தை குடியுங்கள்
நாம் தேங்காய் இளநீரைப் பற்றி பேசுகையில், இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கை பானம். கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் இது கிடைத்தாலும், கடற்கரை விடுமுறைக்கு செல்லும்போது கண்டிப்பாக இதை அருந்துவோம். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.
மேலும் படிக்க | உடல் எடை குறைந்து பிளாட் டம்மி வேண்டுமா? அப்போ இரவு உணவில் இதை சாப்பிடுங்கள்
இளநீரில் காணப்படும் சத்துக்கள்
இளநீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அது உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை என்சைம்களை வழங்கும், இதன் காரணமாக உடல் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
கொழுப்பை குறைக்க உதவும்
கலோரிகள் மற்றும் கொழுப்பின் மீது ஒரு கண் வைத்திருக்கும் பெண்களுக்கு இளநீர் அற்புதமானது. யோகர்ட் ஸ்மூத்திகள், மில்க் ஷேக்குகள் அல்லது சாக்லேட் பானங்கள் போலல்லாமல், இளநீர் கொழுப்பு இல்லாதது. ஒரு கப் இளநீரில் 0.48 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. மறுபுறம், ஒரு சாக்லேட் மில்க் ஷேக்கில் சுமார் 8.10 கிராம் கொழுப்பு உள்ளது.
இளநீர் எப்படி எடையை குறைக்க உதவுகிறது?
இளநீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட்டுகளும் காணப்படுகின்றன, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒரு முறை குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன், அதிக உணவு உண்பதில் இருந்து காப்பாற்றப்படும். அத்தகைய சூழ்நிலையில், படிப்படியாக உங்கள் எடை குறைகிறது. மற்ற பழச்சாறுகளை விட இளநீர் அதிக நன்மை பயக்கும், ஏனெனில் இளநீரில் அதிக தாதுக்கள் உள்ளன.
இளநீரை எப்போது குடிக்க வேண்டும்?
இளநீரை எப்போது குடித்தாலும், அது உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் இந்த இயற்கை பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது, அதன் விளைவு நாள் முழுவதும் தெரியும், நீங்கள் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணருவீர்கள்.
தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
தினசரி உணவில் இளநீரைச் சேர்ப்பது புத்திசாலித்தனமான முடிவாகக் கருதப்படுகிறது. இது நம் வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இந்த பானத்தில் உள்ள பயோ-ஆக்டிவ் என்சைம்களின் உதவியுடன், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். இளநீர் குடிப்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாது, இதனால் மக்கள் குறைந்த உணவை உட்கொள்வதோடு படிப்படியாக எடையும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! சரியான முறையில் சாப்பிடலைன்னா ... பழங்களால் ஒரு பயனும் இருக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ