ஒவ்வொருவரது உடல் ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கவழக்கம், சுறுசுறுப்பான செயல்முறை போன்றவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியமானது நல்ல உறக்கம்.  ஒருவருக்கு சரியான உறக்கம் இல்லையென்றால் அவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், அறிவாற்றல் குறைவு மற்றும் மனநல கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று பல செய்திகளை நாம் கேட்டறிந்திருப்போம். ஆனால் தூக்கத்திற்கும், எடை குறைப்பிற்கும் சம்மந்தம் உள்ளது பற்றி நாம் பெரிதாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.  ஒருவரது மோசமான தூக்க பழக்கவழக்கம் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் பருமனடைய செய்கிறது.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியாக தூங்காவிட்டால் அவர்களது உடல் எடை குறையாது என்று சில ஆய்வுகள் கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்


போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடலில் கிரெலின் எனும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது, இது நமது சாப்பிடும் ஆர்வத்தை தூண்டும் ஹார்மோனாகும்.  இதன் காரணமாக நீங்கள் அதிக உணவு உட்கொண்டு உடல் எடை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.  லெப்டின் என்கிற ஹார்மோன் நாம் சாப்பிடும் அளவை கணித்து போதும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது, நாம் சரியாக தூங்கவில்லையெனில் இந்த ஹார்மோன் ஒழுங்காக செயல்படாது.  அதோடு சரியாக  இருந்தால் நமக்கு சோர்வு ஏற்படும், இதனால் நமக்கு உடல் செயல்பாடுகள் குறைந்து நமது எடை அதிகரிப்பு நிகழ்கிறது.  உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தொடர்ந்து நிம்மதியாக தூங்க வேண்டும்.



மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினசரி ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும், இரவு தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு முடிக்க வேண்டும்.  இரவு தூங்க செல்வதற்கு முன் எளிய பயிற்சிகள் அல்லது தியானம் போன்றவற்றை செய்யலாம், தூங்குவதற்கு முன்னர் காஃபின் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் மது, புகைபிடிப்பதைத்தவிர்க்க வேண்டும்.  மேலும் தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கணினி, செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Honey For Skin: முகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ