எடை இழப்புக்கான உணவு முறை: கொழுப்பு, பெரிய வயிறு, உடல் பருமன் ஆகியவற்றை விரும்புபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவற்றிலிருந்து விலகி இருக்க, சீரான வாழ்க்கை முறையும், உணவு முறையும், உடற்பயிற்சியும் மிக முக்கியமாகும். எனினும், நேரமின்மையால், நம்மில் பலரால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. உடல் எடையை குறைக்க வேறு எந்த வழியையும் பின்பற்ற முடிவதில்லை. எனினும், நாம் தினமும் சரியான உணவு முறையை பின்பற்றினால், குறுகிய காலத்திலேயே தொப்பை கொழுப்பை குறைக்க முடியும். நீங்கள் சரியான உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் வயிறு ஒரு மாதத்தில் குறையத் தொடங்கும். உடல் எடையை குறைக்க சரியான உணவு முறையை பின்பற்றுவதற்கான வழிகளை இங்கே காணலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வகையான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்?


உடல் எடையைக் குறைக்க உணவைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நீங்கள் குறைந்த கலோரி மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியமும் பராமரிக்கப்படும், எடையும் குறையும். உணவு உட்கொள்ளும்போது, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் உணவில் உள்ள கலோரிகளையும் கொழுப்பையும் முடிந்தவரை குறைக்க வேண்டும். கொழுப்பை அதிகரிக்கும் விஷயங்களை உணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உணவில் எண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புப் பொருட்களைக் குறைக்கவும். உடல் எடையை குறைக்க இந்த வழக்கத்தை தினமும் பின்பற்றலாம்.


எத்தனை முறை உணவு உட்கொள்ளலாம்? 


உணவு நிபுணர்களின் கூற்றுப்படி, நாள் முழுவதும் 7-8 முதல் எட்டு முறை சிறிது சிறிதாக உணவு உட்கொள்ளலாம். இவற்றை காலை உணவு, தேநீர் வேளைக்கான உணவு மற்றும் முழுமையான உணவு என பிரித்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | 50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்! 


காலை 06-6:30


காலை எழுந்தவுடன் உங்கள் நாளை வெள்ளரி, வெந்தயம் அல்லது பெருஞ்சீரக தண்ணீருடன் தொடங்குங்கள். வெள்ளரிக்காய் தண்ணீர் நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மறுபுறம், வறுத்த வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவை ஆற்றல் நிறைந்தவை. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.


7 மணி


ஆற்றல் தரும் நீரை பருகியவுடன் காய்கள் அல்லது முளை கட்டிய பயறு வகைகளை உண்ணலாம். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. நட்சுகள் மற்றும் முளைகளில் உள்ள கொழுப்புப் பொருட்களைத் தவிர்க்கவும். இவை உங்களுக்கு ஆற்றலைத் தரும். இதனுடன் கொழுப்பு நீக்கிய பாலையும் குடிக்கலாம்.


8 மணிக்கு


காலை உணவை சரியாக 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். ஆனால் அது இலகுவாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்க வேண்டும். நமது பாரம்பரிய காலை உணவுகளான இட்லி, தோசை, பொங்கல் ஆகியவை காலை உணவுக்கு ஏற்ற உணவுகளாகும். 


11 மணி


இந்த நேரத்தில் நீங்கள் சாலட் மற்றும் முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிடலாம். க்ரீன் டீ மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதும் பலன் தரும்.


1 மணிக்கு மதிய உணவு


மதிய உணவில் ஓட்ஸ் ரொட்டி சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஓட்ஸ் ரொட்டியில் கோதுமையை விட குறைவான கலோரிகள் உள்ளன. இது எடையைக் குறைக்கும். இதனுடன், பச்சை காய்கறிகள், குறைந்த எண்ணெயில் சமைக்கப்பட்ட காய்கறிகள், சாலட் மற்றும் தயிர் அல்லது மோர் எடுத்துக் கொள்ளலாம். ரொட்டிக்கு பதிலாக ஒரு கப் சாதம், ராகி இட்லி, வரகு அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் ஆகியவற்றையும் சாப்பிடலாம்.  


2 மணிக்கு


மதிய உணவுக்குப் பிறகு, சிறிது நேரம் நடக்கவும். இதனால் உணவு நன்றாக ஜீரணமாகும். மதிய உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கிரீன் டீ எடையைக் குறைக்க உதவுகிறது.


மாலை 4 மணி


மாலையில் பழச்சாறு மற்றும் சாலட் சாப்பிடுவது நல்லது. பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் ஆற்றல் நிறைந்தவை.


மாலை 7 மணிக்கு


இரவு உணவை மாலையில் தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் கனமான உணவுகளுக்குப் பதிலாக லேசான உணவை சாப்பிட வேண்டும். மாலையில், நீங்கள் கிச்சடி, கஞ்சி அல்லது ப்ரவுன் ரைஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ