100 Kg to 50 Kg! அசால்டாக அம்புட்டு எடையையும் குறைத்த பெண்மணி! சீக்ரெட் என்ன?
Weight Loss Secrets And Fitness Routine : ஒரு பெண், 100 கிலோவாக இருந்த தனது எடையை 50 கிலோவாக மாற்றியிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது தெரியுமா?
Weight Loss Secrets And Fitness Routine : நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனை, உடல் பருமன். இந்த பிரச்சனையால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். நீரிழிவு, இதய நோய், அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இவை வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு பலர் ஹெல்தியான வாழ்க்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்து விடுகின்றனர். அப்படித்தான், ஒரு பெண் 100ஆக இருந்த தனது எடையை 50ஆக குறைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது? இதற்காக அவர் செய்த விஷயங்கள் என்ன? இங்கு பார்ப்போம்.
100 to 50..யார் இந்த பெண்?
தெபாங்கா பானர்ஜீ என்ற இந்த பெண், ஒரு பிரபல நாளிதழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், தான் உடல் எடையை இளைத்ததற்கான காரணம் குறித்தும், எப்படி இதை செய்தார் என்பது குறித்தும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில், தன்னை பட்டினி போட்டுக்கொள்ளாமல் உடல் எடையை குறைத்ததாகவும் ஹெல்தியான உணவு பழக்கத்தை பின்பற்றியதாகவும் கூறியிருக்கிறார்.
ஃபாலோ செய்த டயட்:
காலை உணவு:
காலையி, ஓட்ஸ் கஞ்சியை உணவாக உட்கொண்ட இவர், அதனுடன் பெர்ரி அல்லது முட்டை பொரியலை (Scrambled Eggs)எடுத்துக்கொண்டாராம். இயற்கை பானமாக கிரீன் டீ அல்லது பிளாக் காஃபியை சர்க்கரையின்றி குடித்திருக்கிறார்.
காலை ஸ்நாக்ஸ்:
காலையில் ஸ்நாக்ஸாக, கிரேக்க தயிர் எனப்படும் கிரீக் தயிரை சாப்பிட்டிருக்கிறார். அத்துடன் அப்பிள், பேரிக்காய், பெர்ரி போன்ற பழங்களில் ஏதேனும் ஒரு பழத்தை உட்கொண்டிருக்கிறார். ஹெல்தி கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த இவற்றை தாண்டி கை நிறைய பதாம் அல்லது வால்னட்ஸ்களை சாப்பிட்டிருக்கிறார்.
மதிய உணவு:
மதியத்திற்கு க்ரில்டு சிக்கன், அல்லது பேக் செய்யப்பட்ட டோஃபுவை கினோவாவுடன் அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் சாப்பிட்டிருகிறார். இதனுடன் வேக வைத்த காய்கறிகளான ப்ரக்கோலி, கேரட், காலிஃப்ளவர் ஆகியவற்றையும் சேர்த்திருக்கிறார். தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வைத்து செய்த சாலட்டையும் இவர் சாப்பிட்டிருக்கிறார்.
மதிய ஸ்நாக்ஸ்:
கேரட், வெள்ளரிக்காய், முழு தானியத்தால் செய்த சிப்ஸ் உள்ளிட்டவற்றை மதிய வேளை ஸ்நாக்ஸாக உட்கொண்டிருக்கிறார். பாதி வெட்டிய குடைமிளகாயை தனது சாலட்டில் சேர்த்து சாப்பிட்டிருக்கிறார்
இரவு உணவு:
இரவில் கிரில் செய்யப்பட்ட டோஃபு, வறுத்த காய்கறிகள் மற்றும் பிரவுன் அரிசி சாதத்தை சாப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | Weight Loss Challenge: ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க தயாரா..!!
தேவைப்பட்டால் மாலை ஸ்நாக்ஸ்:
ஒரே ஒரு பழம் அல்லது கை நிறைய நட்ஸ்கள்
நீர்ச்சத்து:
தனது எடையை குறைக்க அந்த பெண், 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் வரை குடித்திருக்கிறார், ஹெர்பல் தேநீர், பழச்சாறுகளாகவும் குடித்து இவர் உடலில் நீர்ச்சத்தை உடலில் தக்க வைத்து கொண்டிருக்கிறார்/.
உடற்பயிற்சிகள்:
உடல் எடையை குறைக்க இந்த பெண், தினமும் அதி தீவிர (High-Intensity Interval Training-HIIT) உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இவை கொழுப்பை குறைக்க உதவியதாகவும், தனது உடலில் இருந்த தேவையற்ற தசைகளை குறைக்க உதவியதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார். ஜூம்பா, ஏரோபிக்ஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகளிலும் இவர் ஈடுபட்டிருக்கிறார். அதிகம் சாப்பிடுவதை தவிர்த்த இவர், தனது டயட்டை ஸ்ட்ரிக்டாக பின்பற்றியிருக்கிறார். தன்னை பார்த்து, பிறரும் உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அமிதாப் பச்சன் போல 80களை கடந்து வாழ ஆசையா? ‘இதை’ தினமும் சாப்பிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ