இன்றைய காலக்கட்டதில் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிப்பது மிகப்பெரிய பிரச்சனையாகிவிட்டது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன, ஏனெனில் முதலில் கொரோனா வைரஸ் லாக்டவுன் பின்னர் வீட்டிலிருந்து வேலை. இவை இரண்டே உடல் எடை அதிகரிப்புக்கு மிகப்பெரிய காரணங்களாக மாறிவிட்டது. அந்தவகையில் உடல் எடையை குறைக்கும் செயல்பாட்டில் நாம் அடிக்கடி செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தவறுகளால் உடல் எடை ஒருபோதும் குறையாது


1. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது
நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். எனவே நாம் எப்போதும் நமது உடலை நீரேற்றமாக வைத்து இருக்க வேண்டும், மேலும் இந்த திரவத்தின் உதவியுடன் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுகின்றன. மேலும் உடல் எடை குறைப்பதில் சிரமங்கள் ஏற்படாது.


மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும் 


2. காலை உணவைத் தவிர்ப்பது
தினமும் காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் அல்லது உடல் எடையை குறைக்கும் அவசரத்தில் நாம் காலை உணவை தவிர்கிறோம். அப்படி செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ஏனெனில் காலை உணவு உடலுக்கு சக்தியை தருகிறது. இதனால் அன்றைய தினத்தின் முழு வேலையையும் சோர்வடையாமல் செய்யலாம்.


3. இரவில் இனிப்புப் பொருட்களை சாப்பிடுவது
இனிப்பு உணவுகள் நமது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது, அதன்படி இரவில் சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிட்டால், உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது. உங்களுக்கும் அப்படி ஒரு பழக்கம் இருந்தால் இன்றே இந்தக பழக்கத்தகை தவிர்க்கவும். 


4. போதுமான தூக்கத்தை தவிர்ப்பது
ஆரோக்கியமான வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும், தூக்கமின்மை நம் ஆரோக்கியத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது, இது எடை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது மற்றும் நாள் முழுவதும் நீங்கள் சோர்வாக இருப்பீர்கள்.


5.போதுமான உடல் நகர்வு இல்லாதது
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பது அல்லது டிரைவிங் செய்வது உள்ளிட்டவை காரணமாகவும் உடல் எடை குறைப்பு இலக்கில் தொய்வு ஏற்படலாம். ஏனென்றால் நீண்ட நேரம் ஒரே இடத்தில அசையாமல் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை காரணமாக, உங்கள் உடல் lலிபேஸை உரைப்பது செய்வதை நிறுத்துகிறது. உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுப்பு-தடுக்கும் நொதி தான் லிபேஸ். இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதால் உடல் எடை குறையாது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ