எடை குறைஞ்சு ஃபிட்டா இருக்கணுமா? இதையெல்லாம் சாப்பிடுங்க... சூப்பரா இருக்கலாம்
Weight Loss Tips: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்க வைக்கும்.
உடல் எடையை குறைக்கும் உணவுகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
பல நோய்களைத் தவிர்க்க நாம் உட்கொள்ளும் உணவு வகைகளில் கண்டிப்பாக நார்சத்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்க வைக்கும். இது உணவு உட்கொள்ளலைக் குறைத்து உடல் எடையைக் குறைக்கும். மேலும், நார்ச்சத்து உடலில் இருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுகளை நீக்குகிறது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு சேராது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நமக்கு உதவக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கான நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
கீரை வகைகள்
கீரையில் இரும்புச் சத்து மட்டுமல்ல நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு குறைந்த கலோரிகள் கிடைத்தாலும் வயிறு விரைவில் நிரம்பி நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு ஏற்படும். இது தவிர, கீரை வகைகளை உட்கொள்வதால், உடலுக்கு நல்ல அளவு வைட்டமின்கள் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் ஆகியவை கிடைக்கின்றன.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு ஏற்ற அற்புதமான காய்கறிகளில் ஒன்றாகும். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். ஒரு கப் ப்ரோக்கோலியில் சுமார் 31 கலோரிகள் உள்ளன. இதன் மூலம் உடலுக்கு 2.4 கிராம் வரை நார்ச்சத்து கிடைக்கிறது.
ஆப்பிள்
பழங்களிலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று கூறப்படுகிறது. அதாவது ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகின்றது. கூடுதலாக, இது எடையை குறைக்க உதவுகிறது. நடுத்தர அளவிலான ஆப்பிளை சாப்பிடுவதன் மூலம் 4 கிராம் வரை எடை குறைக்கலாம்.
உலர் பழங்கள்
உலர் பழங்களை தினமும் போதுமான அளவு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்ல அளவு நார்ச்சத்து கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உலர் பழங்களை சாப்பிடுவதும் எடையைக் குறைக்க உதவும். உலர் பழங்களுடன், விதைகளையும் எடை இழப்பு உணவின் ஒரு பகுதியாக்கிக்கொள்ளலாம். சூரியகாந்தி விதைகள் விதைகளில் மிகவும் நன்மை பயக்கும்.
கேரட்
கேரட் பொதுவாக கண்களுக்கு அதிக நன்மை பயக்கும் காயாக கருதப்படுகின்றது. எனினும், இதைத் தவிர இன்னும் பல நல்ல பயன்களும் இதன் மூலம் கிடைக்கும். கேரட்டில் எடை இழப்புக்கு உதவும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. ஒரு கப் பச்சை கேரட்டில் 45 கலோரிகள் மற்றும் 3.1 கிராம் நார்ச்சத்து உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ