இன்றைய தலைமுறையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் பெண்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் கணைய புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக கணைய புற்றுநோய் சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை மற்றும் அறிகுறிகள் வெளிப்பட்டாலும் அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகள் தான் என்று அடையாளம் காண்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
55 ஆண்களை காட்டிலும், 55 வயதுக்குட்பட்ட பெண்களில் கணையப் புற்றுநோய் 2.4 சதவீதம் அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களிடையே கணைய புற்றுநோயின் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 2001 மற்றும் 2018ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட டேட்டாக்களின்படி, இரு பாலினத்தவர்களிடமும் புற்றுநோய்க்கான விகிதங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தான் முதல் அறிகுறியாக வெளிப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் வந்தால் நோயாளியின் கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக காட்சியளிக்கும். பித்த நாளத்திற்கு அருகில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது, இந்த புற்றுநோய்கள் குழாயில் அழுத்தி மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.
கணையத்தின் பகுதியில் உருவாகும் புற்றுநோய் கட்டிகள் வளர்ந்து அருகிலுள்ள மற்ற உறுப்புகளில் அழுத்தத்தை கொடுக்கும். இதனால் உங்கள் வயிறு அல்லது முதுகு பகுதியில் வலி ஏற்படும், இந்த புற்றுநோய் கணையத்தைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கும் பரவக்கூடும். கணையப் புற்றுநோய் வளர்ந்து வயிற்று பகுதியை அடைந்தால் உங்களால் உணவை சரியாக முடியாத நிலை ஏற்படும். இதனால் உங்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் பகுதியில் வலி போன்றவை ஏற்படும். திடீரென்று எதிர்பாராத எடை இழப்பு மற்றும் பசியின்மை போன்றவையும் ஏற்படும்,
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ