உடல் எடையை குறைக்கும் வழிகள்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். உடல் எடையை குறைக்க பல வித இயற்கையான வழிகளும் உள்ளன. அவற்றின் மூலம் உடல் எடையும் குறைவதோடு, அதனால் நமக்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான இயற்கை உபாயம் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியா விதைகளுடன் எலுமிச்சை நீர்: 


உடல் எடையை குறைக்க நம் உணவில் நாம் செய்யும் மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உணவு முறையில் நாம் மேற்கொள்ளும் கட்டுப்பாடு நம் உடல் எடையை குறைக்க நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இது தவிர நமது ஃபேட் மெடபாலிசத்தை துரிதப்படுத்தும் உணவுகள் மற்றும் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் உணவுகள் ஆகியவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை குறைப்பதில் வேகமாக செயல்படும் அப்படி ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றிதான் இந்த பதிவில் நாம் காணவுள்ளோம். இந்த அற்புத உணவு எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கொழுப்பை எரிக்கவும் உதவியாக இருக்கும்.  எலுமிச்சை நீர் மற்றும் சியா விதைகளின் கலவைதான் அந்த அற்புத உணவு. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சியா விதைகளுடன் எலுமிச்சை நீரைக் குடிப்பது எப்படி


எலுமிச்சை மற்றும் சியா விதைகளை இரண்டு வழிகளில் உட்கொள்ளலாம். முதலில், எலுமிச்சை நீர் எடுத்து, அதில் சியா விதைகளை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் இந்த கலவையை அப்படியே விட்டு பின் தேனில் கலந்து உட்கொள்ளவும். 


மேலும் படிக்க | கரம் மசாலாவை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?


எடை இழப்புக்கு எலுமிச்சை நீர் மற்றும் சியா விதைகளின் நன்மைகள்


1. ஃபேட் மெடபாலிக் விகிதத்தை அதிகரிக்கிறது


எலுமிச்சை மற்றும் சியா விதைகள் இரண்டும் கொழுப்பு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். எலுமிச்சை நீரின் சிறப்பு என்னவென்றால், அதில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இரண்டாவதாக, சியா விதைகளில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இந்த வழியில், இரண்டும் சேர்ந்து எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன.


2. நார்ச்சத்து நிறைந்தது


நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எப்போதும் விரைவான எடை இழப்புக்கு உதவுகின்றன. இவற்றை சாப்பிடுவதற்கான சரியான வழியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும்போது, ​​​​அது ஒரு ஜெல் கலவையை உருவாக்குகிறது. இது உடல் கொழுப்பில் ஒட்டிக்கொண்டு உடலில் இருந்து அதை அகற்ற வேலை செய்கிறது.


3. வயிற்றை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்


சியா விதைகள் மற்றும் எலுமிச்சை நீர் இரண்டும் வயிற்றை சுத்தம் செய்வதில் திறம்பட செயல்படுகின்றன. இந்த இரண்டு சேர்மங்களும் சேர்ந்து வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன மற்றும் உணவு செரிமானத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகின்றன. பின்னர் அது மலத்தை மொத்தமாகச் சேர்ப்பதோடு, அதை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இந்த வழியில் வயிற்றை சுத்தம் செய்ய இந்த கலவை உதவுகிறது.


மேலும் படிக்க | இளம் வயதிலேயே நரை முடியால் அவதியா? இந்த ஸ்பெஷல் மூலிகை எண்ணெய் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ