கரம் மசாலாவை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?

Benefits Garam Masala: இந்திய உணவுகளில் பெரும்பாலும் கரம் மசாலா பயன்படுத்தப்படுகின்றன. இந்த கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2023, 10:08 AM IST
  • வீட்டிலேவே ​கரம் மசாலா செய்வது எப்படி.
  • கரம் மசாலா தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
  • அதிகமாக கரம் மசாலாவை எடுத்துக்கொள்வது உடலுக்கு தீமைகளை ஏற்படுத்தும்.
கரம் மசாலாவை ஏன் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? title=

கரம் மசாலா நன்மைகள்: இந்திய உணவுகளில் பெரும்பாலும் கரம் மசாலா பயன்படுத்தப்படுகின்றன. இந்த கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். அதேபோல் கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவை தான் இந்த கரம் மசாலா தூள். இந்திய உணவுகளில் சுவையையும் வாசனையையும் அதிகரிக்க முக்கிய பொருளாக கரம் மசாலா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை கரம் மசாலா செய்கிறது. கரம் மசாலா பல தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே நாம் தினசரி உணவில் உபயோகிக்கும் இந்த கரம் மசாலா தூளின் நன்மைகளை குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

கரம் மசாலா தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1- கரம் மசாலா தூளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, இது உங்கள் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. அத்துடன் இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இவைதான் கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாக குறைக்கும் உணவுகள்!!

2- புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தடுக்க கூட கரம் மசாலா உதவுகிறது. மேலும் கரம் மசாலா பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. எனவே அவை உடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன.

3- கரம் மசாலா தூளை உட்கொள்வது இரத்த சோகையிலிருந்து விடுபடவும் ஆரோக்கியமான உடலை உருவாக்கவும் உதவும். எனவே, உங்கள் உணவில் கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

4- கரம் மசாலாவில் ஏலக்காயின் நன்மை உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்க கூடியது என்று அறியப்படுகிறது. மேலும் இந்த மசாலாவை உணவில் சேர்ப்பது மூலம் உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்க முடியும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

வீட்டிலேவே ​கரம் மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஏலக்காய்
கருப்பு மிளகு
இலவங்கப்பட்டை
சீரகம்
பிரியாணி இலைகள்

செயல்முறை
முதலில் ஒரு கடாயில் ஏலக்காய், கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, சீரகம், பிரியாணி இலைகள் இவை அனைத்தையும் போட்டு அவை உலரும் வகையில் நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு அவற்றை ஆற விடவும். பிறகு இந்த மசாலா கலவையை மிக்ஸிக்கு மாற்றி அதை பொடியாக அரைத்து எடுத்தால் உங்கள் கரம் மசாலா தூள் ரெடி.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய ‘டயட்’ ஃபாலோ பண்ணறீங்களா.. 8 விஷயங்களை மறக்காதீங்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News