உடல் எடை குறைக்கும் குறிப்புகள்: உடல் பருமன் நமது நாட்டில் மட்டுமல்ல, உலகிலும் ஒரு தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடு இல்லாதபோது உடல் பருமன் மிகவும் கடுமையான பிரச்சினையாக மாறும். ஆண்களை விட பெண்களில் உடல் பருமன் அதிகமாக காணப்படுகிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உங்களைச் சூழ்ந்து கொள்கின்றன. சில பெண்களுக்கு சிறுவயதிலேயே உடல் குண்டாகத் தொடங்கிவிடுகிறது. இதற்குப் மரபணு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயம் சில பெண்களுக்கு வயது ஏற ஏற எடை கூடுகிறது. பொதுவாக அனைத்து வீடுகளிலும் வயதான பெண்கள் பெரும்பாலும் பருமனான உடலுடனேயே இருப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையைக் குறைக்கும் பானம்


காலைப் பொழுது உங்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மனநிலைக்கும் நல்லது. மறுபுறம், நீங்கள் எடை இழக்க விரும்பினால், காலையில் உட்கொள்ளும் உணவு மற்றும் காலையில் செய்யும் வேலைகள் ஆகியவற்றில் அதுக கவனத்தை செலுத்த வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கொண்டிருக்க வேண்டும், நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். 


உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில விதைகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மறுபுறம், ஊறவைத்த விதைகள் மற்றும் அவற்றின் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். விதைகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பணியை செய்கின்றன. காலையில் எந்தெந்த விதைகளின் நீரை உட்கொள்வதால் உங்கள் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இந்த விதைகளின் நீரை காலையில் எழுந்தவுடன் குடிக்கவும்:


வெந்தய நீர்:


உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலையில் எழுந்ததும் வெந்தய நீர் குடிக்கலாம். வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதன் நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதால், எடையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.


மேலும் படிக்க | இந்த 5 வகையான உணவு அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கும்..! இப்படி சாப்பிட வேண்டும்


துளசி விதை நீர்:


தினமும் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதில் வெளியேறி, நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது. ஆகையால் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் தினமும் துளசி விதை தண்ணீரை குடிக்கலாம்.


ஊறவைத்த பாதாம்:


ஊறவைத்த பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவது, நாள் முழுவதும் உங்களை முழு ஆற்றலுடன் வைத்திருக்கும். மேலும் நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். இது தவிர தினமும் பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நினைவாற்றலை மேம்படுத்துகிறது.


உலர் திராட்சை தண்ணீர்:


உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் திராட்சையில் உள்ளன. ஆகையால் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அதிக உதவி கிடைக்கும். 


இந்த பானங்களை உட்கொள்வதன் மூலம், உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உங்கள் தொப்பை கொழுப்பு உருகி விரைவாக இல்லாமலேயே போய்விடுகிறது. ஆகையால இயற்கையான பாதுகாப்பான வழியில் தொப்பையை குறைக்கும் பானங்களாக இவை கருதப்படுகின்றன. 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தொங்கும் தொப்பை தொல்லை செய்கிறதா? அப்போ இந்த மசாலா பொருட்கள் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ