Blood Group Diet: ஒவ்வொரு இரத்த வகைக்கும், அதாவது பிளட் க்ரூபிற்கும் அவற்றின் தனி இயல்பு இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளின் தாக்கம் நமது பிளட் குரூப்பின் மீது இருக்கும்.
உடலை ஆரோக்கியமாகவும், நோயற்றதாகவும் வைத்திருக்க, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டியது அவசியமாகும். ஆனால் உங்கள் பிளட் குரூப்பிற்கு ஏற்ப உணவை உட்கொண்டால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
ப்ளட் க்ரூப் உணவுமுறை பற்றிய ஆராய்ச்சிக்குப் பிறகு, ஒவ்வொரு வகை உணவிலும் லெக்டின்கள் உள்ளன என்ற முடிவுக்கு நிபுண்ரகள் வந்துள்ளனர். இது ஒரு வகை புரதம். இந்த புரதம் ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறது. இது ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது.
ப்ளட் க்ரூப் டயட் என்பது உடல் எடையை குறைப்பதற்கான உணவு அல்ல, நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான டயட் ஆகும். லெக்டின் புரதம் ஒரு பிசின் புரதம். இரத்த வகையுடன் பொருந்தாத இத்தகைய லெக்டின்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, உடலில் எரியும் உணர்வு இருக்கலாம்.
உங்கள் ப்ளட் க்ரூப் ஓ ஆக இருந்தால், நீங்கள் அதிக புரதத்தை உட்கொள்ள வேண்டும். இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்களை இதில் உட்கொள்ளலாம். தானியங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை சரியான அளவில் உட்கொண்டால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இரத்த பிரிவு உள்ளவர்கள் சைவ உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த க்ரூப் உள்ளவர்கள் தங்கள் உணவில் காய்கறிகள், கடல் உணவுகள், தானியங்கள், பீன்ஸ் மற்றும் பழங்களை சேர்க்கலாம். இவை அனைத்தையும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
இந்த இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் எந்த வகையான உணவையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அத்தகையவர்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகளை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைச்சி, பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்களுக்கு ஆரோக்கியமானவை. சீரான உணவுடன், வழக்கமான உடற்பயிற்சியும் அவசியம்.
A மற்றும் B இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகள், AB இரத்தக் குழுவிற்கும் தீங்கு விளைவிக்கும். AB இரத்த வகை உள்ளவர்களுக்கு A இரத்த வகை போல உணவை ஜீரணிக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் குறைவாக இருக்கும். ஆகையால் இவர்கள் சிவப்பு இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.