எடை இழப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் பானம்:
இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால், உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமன் அதிகரிப்பதால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உங்களைச் சூழ்ந்து கொள்கின்றன. பிறகு உடல் பருமனை குறைக்க ஜிம், யோகா, டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை நாட வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்படுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்களால் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக உடற்பயிற்சிக்கு போதிய நேரத்தை ஒதுக்க முடிவதில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் வழிகளை மக்கள் நாடுகிறார்கள். அப்படி ஒரு இயற்கையான பானத்தை தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த பானத்தை உட்கொள்வதன் மூலம், உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உங்கள் தொப்பை கொழுப்பு உருகி விரைவாக இல்லாமலேயே போய்விடுகிறது. இந்த பானத்தை கோடை காலத்திலும் அருந்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உடல் நலனிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால இயற்கையான பாதுகாப்பான வழியில் தொப்பையை குறைக்கும் ஒரு பானமாக இது கருதப்படுகின்றது. இதை செய்யும் செயல்முறையை பற்றி இங்கே காணலாம்.
உடல் எடையைக் குறைப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு ஒருவர் கடினமாக உழைக்க வேண்டும். மற்றும் சரியான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். உடலுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும் பல மசாலாபொருட்கள் பற்றி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவை உடல் ஆரோக்கியத்துக்கு அதிக அளவு நன்மை பயக்கும். அவற்றின் சாறு அதாவது தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அழகையும் பராமரிக்கிறது.
இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- 1 தேக்கரண்டி தனியா விதைகள்
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 ஏலக்காய்
- 200 மில்லி தண்ணீர்
மேலும் படிக்க | A, B, AB, O....உங்க பிளட் க்ரூப் என்ன? அதற்கான டயட் என்ன தெரியுமா?
இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் பானம்: தயாரிப்பது எப்படி?
- இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் பானத்தை தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் அதில் தண்ணீரை ஊற்றி சூடாக்க வைக்கவும்.
- இதற்குப் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சூடான நீரில் போடவும்.
- அதன் பிறகு, தண்ணீர் பாதியாகக் குறையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
- அதன் பிறகு, கேஸ் அடுப்பை அணைத்து, ஒரு கோப்பையில் தண்ணீரை வடிகட்டவும்.
- நீங்கள் விரும்பினால், இந்த பானத்தில் சுவைக்கு 1-1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கலாம்.
- உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் இந்த பானத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
- இதை ஒரு நாளைக்கு 2-3 முறையாவது குடிக்கலாம்.
- சாப்பிட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகும் இந்த பானத்தை நீங்கள் குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 1 பழம்... பல பலன்கள்... பிரமிக்கவைக்கும் மாதுளையின் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ