ஈசியா உடல் எடை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிங்க, ஒரே வாரத்தில் குறையும்!!
Weight Loss Tips: இயற்கையான வழியில் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். ஒரு சிறப்பு இலையின் சாறு இதில் நமக்கு உதவும்.
உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை சாறு: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்த கட்டாயமாக உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.
எனினும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இயற்கையான வழியில் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். ஒரு சிறப்பு இலையின் சாறு இதில் நமக்கு உதவும். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கறிவேப்பிலை உடல் எடையை குறைக்கும்
கறிவேப்பிலைதான் அந்த அரிய இலை. கறிவேப்பிலை அதன் நறுமணம் காரணமாக, தென்னிந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சுவையை மேம்படுத்துகிறது. ஆனால் இந்த இலையை கொண்டு உடலின் பல பிரச்சனைகளையும் நீக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த பிரச்சனைகளின் ஒன்றுதான் உடல் பருமன்.
மேலும் படிக்க | சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கணுமா? இதை சாப்பிடுங்க போதும்
கறிவேப்பிலையில் காணப்படும் சத்துக்கள்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற பல முக்கிய சத்துக்கள் கறிவேப்பிலையில் உள்ளன என கூறுகிறார். அவை நம் உடலுக்கு நன்மை பயக்கும்.
கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு குவிய ஆரம்பித்திருந்தால், இதை சரி செய்ய கறிவேப்பிலையை உட்கொள்ளலாம். அதில் ஆல்கலாய்டுகள் உள்ளன. இதன் உதவியுடன் கொழுப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கலாம். இதன் சாற்றை குடித்தால், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு குறைவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் பராமரிக்கப்படும்.
கறிவேப்பிலை சாறு: தயாரிப்பது எப்படி?
கறிவேப்பிலை சாறு தயாரிக்க, முதலில் கறிவேப்பிலையை கழுவி தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பானதும் குடிக்கவும். நீங்கள் விரும்பினால் அதன் இலைகளை அரைத்து எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யும் உணவுகள் இவை தான்..! தினசரி சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ