கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க நாம் பல ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்து கொள்கிறோம். அதில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று தான் இளநீர், வெயில் காலத்தில் சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய இளநீர் சிறந்த அமிர்தமாக கருதப்படுகிறது. இளநீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தருவது மட்டுமல்லாமல் உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்குகிறது. இளநீர் குடிப்பது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும், சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதிலும் பெரிதும் உதவியாக இருக்கிறது, இது மட்டுமின்றி இளநீர் குடிப்பது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சிறந்த மூலமாக இளநீர் விளங்குகிறது, உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க கோடை காலத்தில் இளநீரை தவிர எந்த பானமும் சிறப்பாக இருந்துவிட முடியாது.
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா... காலி வயிற்றில் ‘இவற்றை’ சாப்பிடாதீங்க!
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் வேறு பானங்களை குடிப்பதை காட்டிலும் இளநீர் குடிப்பது பலவித ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மேலும் இளநீரில் இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இருப்பதால் நீங்கள் இளநீரை அதிகளவு குடிக்காமல் அளவோடு குடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஒருவர் தினசரி இளநீரை குடித்து வர அவர்களது சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அருமருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு இளநீரை கொடுத்தால் அவர்களது சிறுநீரில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் அதிக சிட்ரேட், பொட்டாசியம் மற்றும் குளோரைடுகள் வெளியேற்றுகிறது. எனவே இளநீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும் என்பது தெரிகிறது. இளநீர் குடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பங்கினை வகிக்கிறது. இளநீரில் நிறைந்துள்ள உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீங்கள் அடிககிட இளநீர் குடித்து வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமும் அல்லது அடிக்கடி இளநீர் குடிப்பது நமது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது. இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் நீங்கி உங்களது சருமம் பொலிவடைகிறது. இது உங்கள் உடலை ஹைட்ரேட் ஆக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. நீங்கள் எந்தளவிற்கு இளநீரை குடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் சருமம் பொலிவடையும். இளநீரில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இளநீரானது ஊட்டச்சத்துக்களுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இந்த வெயில் காலத்தில் நீங்கள் தேங்காய் தண்ணீரை குடிப்பதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் அகற்றப்படுகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த டயட் சார்ட் ஃபாலோ பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ