உடல் எடையை குறைக்க நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் செஞ்சுடாதீங்க!
நீரிழிவு நோய் என்பது சரிசெய்ய முடியாத ஒன்று தான், ஆனால் சில உணவுமுறை மற்றும் பயிற்சிகளின் மூலம் நோயினை கட்டுக்குள் வைத்தெருக்க முடியும்.
நீரிழிவு நோய் தற்போது பொதுவான நோயாக மாறிவிட்டது. மரபு ரீதியாகவும், சில உணவு பழக்கவழக்கங்களாலும் பலருக்கும் நீரிழிவு நோய் வர தொடங்கிவிட்டது. உடல் பருமன் என்பது நீரிழிவு நோய்க்கு முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது சரிசெய்ய முடியாத ஒன்று தான், ஆனால் சில உணவுமுறை மற்றும் பயிற்சிகளின் மூலம் நோயினை கட்டுக்குள் வைத்தெருக்க முடியும். தற்போது நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க செய்யவேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இங்கே காண்போம். நீரிழிவு நோயானது கார்டியோவாஸ்குலார் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உங்களது டயட் மற்றும் உடற்யிற்சியை மெதுவாக தொடங்குங்கள். உடல் எடையை குறைக்க உடல் மற்றும் மன வலிமை ரொம்ப முக்கியம், அதனால் மனதை தெளிவாக வைத்திருங்கள். 1 வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்
இதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்புகள் குறைவதோடு, ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறீர்களால் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டயட் என்பது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெடிட்டெரேனியன் டயட் எனப்படும் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரோட்டீன்கள் போன்றவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே கடுமையான உடற்பயிர்ச்சி செய்வதை தவிர்த்துவிட்டு மெதுவாக செய்யுங்கள், ஏனெனில் அது உங்கள் உடலை சோர்வடைய செய்துவிடும். ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுவதை தவிர்த்துவிடக்கூடாது, இது ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்திவிடக்கூடும். அதனால் சரியான நேரத்தில் மூன்று வேளை உணவையும் சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்வதை தவிர்த்துவிடாதீர்கள். போதுமான நார்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டும் சாப்பிட்டுவிட்டு, நீண்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கும் இன்டர்மிட்டேன்ட ஃபாஸ்டிங்கை நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்கக்கூடாது. உடல் எடை குறைப்பில் எவ்வித செயற்கையான மருந்து, மாத்திரைகளையும் உட்கொள்ளக்கூடாது, இது பல்வேறு விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த வறுத்த பொறித்த உணவுகள், போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ