மளமளவென்று ஏறும் எடையை மடமடவென்று குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க
Weight Loss Tips: உணவில் செய்யப்படும் சில சிறிய மாற்றங்கள் உடல் பருமனை போக்க உதவும். எடையை வேகமாகக் கட்டுப்படுத்த உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எடை இழப்புக்கான உணவு: உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். உடல் பருமனை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர்.
உடல் பருமனைக் கட்டுப்படுத்த, மக்கள் உணவில் பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். மேலும் பல்வேறு நாட்டுப்புற வைத்தியங்களையும் பின்பற்றுகிறார்கள், இருப்பினும் இவற்றாலும் பலரால் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை.
உணவியல் நிபுணர்களின் படி, உணவுமுறையில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். உணவில் சில சிறிய மாற்றங்கள் உடல் பருமனை போக்க உதவும். எடையை வேகமாகக் கட்டுப்படுத்த உணவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பேலன்ஸ்ட் டயட்டை உட்கொள்ளுங்கள் (சமச்சீரான உணவு)
விரைவாக உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பினால்,
- உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
- சமச்சீரான உணவை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
- நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும்.
- காலை உணவையோ மதிய உணவையோ தவிர்க்கக்கூடாது.
- சமச்சீர் உணவில், காலை உணவில் புரதம் நிறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
- மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது, உங்கள் தட்டில் கால் பகுதி தானியங்களால் நிரப்பப்பட வேண்டும்.
- உங்கள் அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- மாலை நேர சிற்றுண்டியில் பருவகால பழங்களையும் சாப்பிடலாம்.
- உங்கள் சமச்சீர் உணவு எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | இயற்கையாகவும் விரைவாகவும் உடல் எடையை குறைக்க குறிப்புகள்
எளிய மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்கவும்
நீங்கள் எடை இழக்க விரும்பினால் எளிய மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை தவிர்க்கவும். வெள்ளை மாவு, வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, நூடுல்ஸ் ஆகியவற்றை உணவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, முழு தானியங்கள், தவிடு மாவு, பழுப்பு அரிசி, கருப்பு அரிசி, கலப்பு தானிய ரொட்டி, தினை, ராகி போன்றவற்றை உட்கொள்ளலாம்.
எடையைக் குறைப்பதில் புரோட்டீன் உணவு பயனுள்ளதாக இருக்கும்:
எடையைக் குறைப்பதில் புரத உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உணவில் புரதத்தை உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வோடு இருக்கும். செரிமானமும் நன்றாக இருக்கும். புரோட்டீன் உணவு தசைகளை வலிமையாக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இதை உட்கொள்வதால் நீண்ட நேரம் பசி ஏற்படாது. இதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். புரத உணவில், பருப்பு வகைகள், பீன்ஸ், கடலைப்பருப்பு, தயிர், பனீர், முட்டை, கோழிக்கறி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
உணவில் நல்ல கொழுப்பைச் சேர்க்கவும்:
அதிகப்படியான கொழுப்பு உட்கொள்ளல் எடை அதிகரிப்புக்கு காரணம் என்று பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. ஆனால் நல்ல கொழுப்பை உட்கொள்வதன் மூலம் எடை கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுப்படுத்த நல்ல கொழுப்பு எண்ணெயை உட்கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய், கனோலா, கடுகு எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
உணவில் அதிக நார்ச்சத்து சேர்க்கவும்:
உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் எடை கட்டுக்குள் இருக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருப்பதோடு, உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகும். நார்ச்சத்து உணவுகள் குடல் பாக்டீரியா மற்றும் உடல் பருமன் அபாயத்தையும் குறைக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் சாலட், முழு தானியங்கள், ஆளி விதைகள், இசப்கோல், பச்சை இலைக் காய்கறிகள், நார்ச்சத்துள்ள பழங்கள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
மேலும் படிக்க | குளிர் காலத்தில் கற்றாழை ஜூஸ் கட்டாயம் குடிங்க, அப்புறம் பாருங்க..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ