Weight Loss: காலை உணவில் மறந்தும் இதை சாப்பிடாதீங்க, எடை வேகமா அதிகரிக்கும்

Breakfast Food To Avoid For Weight Loss: காலை உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். இவற்றில் சில உணவுகளை பற்றி அறிந்தால் நாம் ஆச்சரியப்படக்கூடும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 06:31 PM IST
  • உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாக சிலர் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள்.
  • ஆனால் இதை செய்வது உங்கள் உடலுக்கு நல்லதல்ல.
  • அவ்வாறு செய்வது உங்கள் எடையை அதிகரிக்கலாம்.
Weight Loss: காலை உணவில் மறந்தும் இதை சாப்பிடாதீங்க, எடை வேகமா அதிகரிக்கும் title=

எடை இழப்புக்கு தவிர்க்க வேண்டிய காலை உணவுகள்: காலை உணவு ஒரு நாளின் முதல் உணவாகும். காலையில் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட்டால், அதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உதவி கிடைக்கும். அதேசமயம், காலையில் எழுந்த 3 மணி நேரத்திற்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாக சிலர் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இதை செய்வது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. அவ்வாறு செய்வது உங்கள் எடையை அதிகரிக்கலாம். 

இது தவிர, காலை உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கக்கூடும். இவற்றில் சில உணவுகளை பற்றி அறிந்தால் நாம் ஆச்சரியப்படக்கூடும். ஏனெனில், இவை பொதுவாக நாம் அனைவரும் காலையில் உட்கொள்ளும் பொதுவான காலை சிற்றுண்டிகளாகும். ஆகையால் அப்படிப்பட்ட உணவுகளை கண்டறிந்து தவிர்ப்பது மிக நல்லது. காலை உணவில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

காலை உணவில் இவற்றை சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

ஜூஸ் (பழச்சாறு)

உடல் எடையை குறைக்க பலர் காலை உணவில் ஜூஸ் குடிப்பார்கள். ஏனென்றால், பெரும்பாலான மக்கள் பழச்சாறு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது என்று நினைக்கிறார்கள். எனினும், நீங்கள் மார்க்கெட் ஜூஸை உட்கொண்டால், உங்கள் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். ஏனெனில் பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் உடல் எடை கூடும். 

மேலும் படிக்க | உடல் எடை உடனே குறையணுமா? பிளாக் காபியில் இதை மிக்ஸ் பண்ணி குடிங்க 

எனவே, உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். காலை உணவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம். மறுபுறம், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவில் ரொட்டி, பராத்தா ஆகியவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.

பிஸ்கட்: 

காலையில் தேநீர் அருந்தும்போது, பிஸ்கெட் சாப்பிடும் நபரா நீங்கள்? டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று நினைக்கிறீர்களா? ஆனால் அது தவறு!! ஏனெனில் சந்தையில் கிடைக்கும் டைஜெஸ்டிவ் பிஸ்கட்களில் இருக்கும் அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை ஆகியவை உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

ஆகையால், நீங்கள் காலை உணவில் பிஸ்கட் சாப்பிட்டால், உங்கள் எடையும் வேகமாக அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவில் பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

பராந்தா

பெரும்பாலான மக்கள் காலை உணவாக பராந்தா சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பராந்தாக்களை உட்கொள்வதால் உங்கள் எடை அதிகரிக்கக்கூடும். ஆகையால், நீங்கள் ஸ்லிம்மாக இருக்க விரும்பினால், காலை உணவில் பராந்தா சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss: இந்த சூப்பர் உணவுகளை சாப்பிட்டு பாருங்க, தொப்பை தொலைந்து போகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News