உடல் எடையை குறைக்க சூப்பரான வழி: இந்த டீ குடிங்க போதும்

Weight Loss: ஆரோக்கியமான, சத்தான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் கண்டிப்பாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். மேலும் உடல் எடையை குறைப்பதில் பல வீட்டு வைத்தியங்களும் நமக்கு உதவுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2022, 03:14 PM IST
  • இஞ்சி டீ குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம்.
  • இஞ்சி தேநீர் தொப்பை கொழுப்பைக் கரைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க சூப்பரான வழி: இந்த டீ குடிங்க போதும் title=

உடல் எடையை குறைக்கும் இஞ்சி டீ: இன்றைய அவசர காலகட்டத்தில், உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தொப்பை மற்றும் இடுப்பில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துவிட்டால், அதை குறைக்க பல வித கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது. அனைவராலும் ஜிம்மில் மணிக்கணக்கில் செலவு செய்ய முடிவதில்லை. ஆகையால், எடை குறைக்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. 

ஆரோக்கியமான, சத்தான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலம் கண்டிப்பாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். மேலும் உடல் எடையை குறைப்பதில் பல வீட்டு வைத்தியங்களும் நமக்கு உதவுகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான ஆயுஷி யாதவ், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை பற்றி கூறியுள்ளார். அதுதான் இஞ்சி டீ!! இஞ்சி டீ குடிப்பதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம் என்று அவர் தெரிவிக்கிறார். 

இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?

உணவியல் நிபுணர் ஆயுஷியின் கூற்றுப்படி, இஞ்சி தேநீர் தொப்பை கொழுப்பைக் கரைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மூலிகை தேநீரை உங்கள் சமையலறையில் எப்படி தயாரிப்பது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் - அரை கப்
பால் - அரை கப்
தேயிலை இலைகள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி அல்லது இஞ்சி தூள் - 1 தேக்கரண்டி
சிறிய ஏலக்காய் - அரை தேக்கரண்டி
கிராம்பு அல்லது கிராம்பு தூள் - அரை தேக்கரண்டி

மேலும் படிக்க | Omicron’s BF.7: யாரெல்லாம் உடனடியாக ஒமிக்ரான் டெஸ்ட் எடுக்க வேண்டும்? 

தேநீர் தயாரிப்பது எப்படி

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பால், டீத்தூள், சிறிய ஏலக்காய் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் இஞ்சி அல்லது இஞ்சி பொடி சேர்க்கவும். குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது கேஸ் ஃப்ளேமை அணைத்து டீயை வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி ஒரு கோப்பையில் பரிமாறவும்.

இஞ்சி டீ எப்படி உடல் எடையை குறைக்கிறது?

தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தையும் இது அதிகரிக்கிறது. இவை இரண்டும் உடல் எடையை குறைக்க அவசியமாகும். இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், ஃபோலேட் அமிலம், கொழுப்பு அமிலம், நார்ச்சத்து மற்றும் சோடியம் ஆகியவை இஞ்சியில் காணப்படுகின்றன. இவை உடலுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும். 

இஞ்சி டீயில் சர்க்கரை சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் நன்மைகளுக்கு பதிலாக தீங்கு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலானவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை .)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த உணவுகளுக்கு கண்டிப்பாக 'நோ' சொல்லுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News