எடை இழப்புக்கான குறிப்புகள்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைப்பது எப்படி?


இன்று பலர் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுள்ளனர். சிலரால் டயட்டில் இருக்க முடிகின்றது, ஜிம் செல்ல நேரம் இருக்கின்றது. ஆனால், பலரால் இவற்றுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களும் கவலைகொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால் சில எளிய, இயற்கையான வழிகள் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இரவில் தூங்கும் முன், சில குறிப்பிட்ட விஷயங்கள் மீது கவனம் செலுத்தினால் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


உடல் எடையை குறைக்க இரவில் இதை செய்யுங்கள்:


இரவு 7 மணிக்கு பிறகு இரவு உணவு:


நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு 7 மணிக்கு மேல் இரவு உணவை சாப்பிட வேண்டாம். ஏனென்றால் இரவு உணவுக்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தது 2 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். இரவில் தாமதமாக உணவு உட்கொள்வதால், உணவு சரியாக ஜீரணமாகாது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்குகிறது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளா வேண்டும். ஆகையால் உடல் எடையை குறைக்க, இரவில் தாமதமாக இரவு உணவை உட்கொள்ளும் பழக்கத்தை இன்றே விட்டு விடுங்கள்.


மேலும் படிக்க | நரை முடியை மீண்டும் கருப்பாகனுமா? இந்த சாறை வாரத்திற்கு 3 நாட்கள் பயன்படுத்துங்கள்


சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்


உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இரவு உணவுக்கு பின் க்ரீன் டீ அல்லது வெந்நீரை அருந்தவும். இதை செய்வதால் உணவு எளிதில் ஜீரணமாகும். மேலும் க்ரீன் டீ உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.


நல்ல உறக்கம் கண்டிப்பாக தேவை


நமது தூக்கத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையே ஆழமான தொடர்பு உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், கண்டிப்பாக தினமும் இரவில் நன்றாக தூங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றம் சீராகும். இதனால் எடை அதிகரிக்காது.


மஞ்சள் பால் குடிக்கவும்


மஞ்சள் பால் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும் தெர்மோஜெனிக் பண்புகள் இதில் இருப்பதே இதற்குக் காரணம்.


கூடுதல் தகவல்:


உடல் எடையை குறைக்க, இரவு உணவில் இதை சாப்பிடுங்கள்:


பச்சைப்பயறு:


பயத்தம்பருப்பில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள், இரவு உணவில் இந்த பருப்பை உட்கொள்ளலாம். பயத்தம்பருப்பை வேக வைத்து தாளித்து ‘தால்’ செய்து சாப்பிடலாம். 


ஜவ்வரிசி கிச்சடி:


ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதன் காரணமாக அதை சாப்பிடுவது இலகுவாக இருக்கும். எனவே, தினமும் இரவு உணவில் ஜவ்வரிசி கிச்சடியை உட்கொள்ளலாம். இதை செய்ய, ஒரு கப் ஜவ்வரிசியை கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு கடாயில் நெய்யை சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, பின் உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி, வேர்கடலை, சேர்த்து, பிறகு உப்பும் கொத்தமல்லியும் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால், இதில் எலுமிச்சைப் பழ சாற்றையும் சேர்க்கலாம். 


பப்பாளி சாலட்:


பப்பாளி மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. மேலும் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு உணவில் இதை உட்கொள்ளலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கருத்தரிப்பதில் சிக்கலா? கவலை வேண்டாம்! நம்பிக்கையூட்டும் கொரிய விஞ்ஞானிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ