உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த பணி எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க, நீங்கள் உடற்பயிற்சி முதல் சரியான உணவைப் பின்பற்ற வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்றினால் தான் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது சரியான பழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம். இல்லை என்றால் உங்கள் முஅய்ற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். ஆம், அதிலும் மிக முக்கியமாக காலை நேர உணவுகளில் செய்யப்படும் இந்த தவறுகள் உங்கள் முயற்சி அனைத்தையும் பாழாக்கி விடும், எனவே அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் எடை இழப்பு முயற்சியை கெடுக்கும் சில பழக்கங்கள் மற்றும் தவறுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உங்கள் எடை இழப்பு முயற்சியை பாழாக்கும் தவறுகள்
காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது மிக முக்கிய உணவாகும், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் காலை உணவும் ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் முக்கியம். பலர் காலை உணவைத் தவற விடுகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள், இதற்குக் காரணம் வேலையில் பிஸியாக இருப்பதுதான். வேலையில் பிஸியாக இருப்பதாலும், அவசரத்தில் இருப்பதாலும், பெரும்பாலான மக்கள் தங்கள் நாளின் இந்த அத்தியாவசிய உணவை தவறவிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் மற்றும் உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும், இது வாய்வு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது முக்கியம், இது உங்கள் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யும். அதுமட்டுமின்றி, காலையில் காலை உணவை உட்கொள்வதன் மூலம், எடை இழப்பு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
காபி - டீயில் அதிக இனிப்புகளைச் சேர்த்தல்
தேநீர் மற்றும் காபி காலையில் சிலருக்கு அவசியம் தேவை. நீங்கள் கருப்பு காபி குடித்தால், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் டீ மற்றும் காபியில் அதிக சர்க்கரை சேர்க்கத் தொடங்கும் போது, அது உங்கள் எடை இழப்பு திட்டத்தை கெடுத்துவிடும். அதுமட்டுமின்றி, டீ, காபி போன்றவற்றில் அதிகளவு சர்க்கரை சேர்ப்பதால், அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வு போன்றவையும் ஏற்படும். அதுமட்டுமின்றி, டீ மற்றும் காபியில் அதிக அளவு பால் உங்கள் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதிகப்படியான பால் கொழுப்பு, கலோரிகளை அதிகரிக்க உதவுகிறது, இது தீங்கு விளைவிக்கும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!
பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல்
உங்கள் நாளை சிறப்பாகத் தொடங்க வேண்டுமென்றால், காலையில் எழுந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். எனவே உங்கள் எடையை அதிகரிக்கும் உணவுகளை தேர்வு செய்யாதீர்கள். காலையில் எழுந்தவுடன் சர்க்கரை நிறைந்த பேஸ்ட்ரிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். காலையில் பேக்கரி உணவுகள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை உட்கொள்வது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறிது நேரம் கழித்து உங்களை சோர்வடையச் செய்கிறது. காலை உணவில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதன் மூலம் காலையில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், ஆனால் பிறகுதான் உங்கள் ஆற்றல் அனைத்தும் வடிந்து சோர்வாக இருப்பீர்கள். அதனால்தான் காலையில் இதுபோன்ற பொருட்களை சாப்பிட வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ