Weight Loss Tips: நிம்மதியா சாப்பிடுங்க... நிஜமா எடை ஏராது
எடை அதிகரிப்பதைத் தடுக்கும் குறைந்த கலோரி உணவுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எடை அதிகரித்தவுடன், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் உங்கள் உணவைக் கட்டுப்படுத்தினால், உங்கள் அதிகரித்த எடையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உங்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் குறைந்த கலோரி உணவுகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
எடை அதிகரிப்பு (Weight Loss) உணர்வுள்ளவர்களுக்கு அப்பளம் ஒரு சிறந்த வழி. அப்பளத்தில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. பசிக்கும் போது சாப்பிடுங்கள். இதன் மூலம், உங்கள் எடையை எளிதாகக் (Health Tips) கட்டுப்படுத்தலாம். ஆனால் சுட்டு மட்டுமே சாப்பிடுங்கள், பொரிக்க வேண்டாம். இதை காய்கறி ஸ்டஃபிங்குடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
ஓட்ஸ் மற்றும் துருவிய கேரட் கொண்டு செய்யப்படும் இட்லி மிகவும் ஆரோக்கியமானது. மேலும் இதில் மிகக் குறைந்த கலோரி உள்ளது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பும், அத்துடன் உடல் எடை கூடும் என்ற கவலையும் இருக்காது. இதை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளாமல், மதிய உணவு அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
டோக்லாவும் மிகக் குறைந்த கலோரி பொருளாகும். இதை மைக்ரோவேவில் மிக எளிதாக செய்யலாம். காலை அல்லது மாலை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
குறைந்த கலோரி ஸ்நாக்ஸாக முட்டை பொறி மற்றும் வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடலாம். இது உங்கள் வயிற்று பிரச்சனைகளை நீக்கி உங்களுக்கு ஆற்றலை தரும். மேலும், இதனால் எடை கூடும் அபாயமும் இருக்காது. பசி எடுக்கும் போதெல்லாம் கவலையின்றி சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை கடைபிடிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR