அடிவயிற்று தொப்பையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
ஒரு மனிதர் சரியான அளவில் தூக்கத்தை பெறவில்லையென்றால் பல உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும், அதில் முக்கியமான ஒன்று தான் உடல் பருமன்.
ஒருவரது சிறப்பான ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது, இரவில் போதுமான அளவு தூக்கத்தை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் எவ்வித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே உடல் கொழுப்பு விநியோகத்தை தீர்மானிப்பதில் தூக்கத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறைந்த அளவிலான தூக்கத்தை பெரும் பெரியவர்களின் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புகள் கைகள், கால்கள் மற்றும் அடிவயிறு போன்ற எந்த உறுப்பில் சேரும் என்பது பற்றி எவ்வித தெளிவான தகவலும் கண்டறியப்படவில்லை. அதிக எடையுடன் இருப்பது பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பெரியவர்களில் 66%க்கும் அதிகமானோர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமான உடல் கொழுப்பை பராமரிப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது. உடலில் அதிகளவு கொழுப்புகள் இருப்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும். இதுதவிர அதிக கொழுப்புகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், எண்டோடெலியல் மற்றும் கார்டியோமெடபாலிக் செயலிழப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு போதுமான அளவில் தூக்கத்தை பெற பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகள் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் தூக்கம் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பராமரிப்பதற்கான வழிமுறையாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ