எடை இழப்புக்கு இந்த பழங்களைத் தவிர்க்கவும்: இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்கு வழக்கமான உடற்பயிற்சியுடன், சரியான உணவுமுறையும் அவசியம். உடல் எடையை குறைப்பவர்கள் உணவில் தானியங்களை குறைவாக சாப்பிடுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக இருப்பதாலும், நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் இவை செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. இதனால் வளர்சிதை மாற்றம் நன்றாக இருப்பதோடு கொழுப்பை இது எரிக்கிறது.
ஆனால் கோடையில் கிடைக்கும் சில பழங்களை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்புகளின் அளவு அதிகமாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த பழங்களை தவிர்க்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த பழங்களை பற்றி பார்க்கலாம்.
அன்னாசிப்பழம்:
கோடையில் அன்னாசிப்பழம் சாப்பிடுவது மிகவும் ருசியான ஒரு விஷயம். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அன்னாசிப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது உங்கள் எடையை அதிகரிக்கும். ஆகையால் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
திராட்சை
திராட்சையை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மற்றும் இது செரிமானத்துக்கும் நன்மை பயக்கும். ஆனால் 100 கிராம் திராட்சைப்பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை மற்றும் 70 கலோரிகள் உள்ளன. ஆகையால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவில் திராட்சை சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இதோ...இந்த மேஜிக் பானம் சுகரை கட்டுப்படுத்தும்
சப்போட்டா
சப்போட்டா பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனுடன் கலோரிகளின் அளவும் அதிகமாக உள்ளது. ஆகையால் இதை உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்கலாம்.
மாம்பழம்
மாம்பழம் பழங்களின் ராஜா. மாம்பழ சீசனில் அதிகம் மாம்பழம் சாப்பிடத் தோன்றும். ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மாம்பழத்தை சாப்பிடாதீர்கள். மாம்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரி அளவு மிக அதிகம். 100 கிராமில் 80 முதல் 100 கலோரிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக மாம்பழங்களை உட்கொண்டால், உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகளுடன் அதிக கொழுப்பு உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் சுமார் 116 கலோரிகள் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். வைட்டமின் ஏ, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து இதில் ஏராளமாக உள்ளது. இதை சாப்பிடுவது உடனடி ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், வாழைப்பழத்திலிருந்து விலகி இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மூன்றே மாதங்களில் தொப்பை தொலைந்துவிடும்: இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ