Low Calorie Diet For Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் சிறந்த உணவு முறையை பின்பற்றுவது அவசியம். ஒரு மாதத்திற்கு உணவியல் நிபுணர் பரிந்துரைக்கும் டயட்டை பின்பற்றினால், மிக வேகமாக உடல் எடையை குறைக்கலாம். ஒரு மாதத்தில் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப 5 கிலோ அளவிற்கு குறைக்க முடியும். அதிக எடை காரணமாக, கல்லீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், பிபி, இதய நோய்கள், மூட்டு வலி உள்ளிட்ட பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. காலையில் குடிக்கும் பானம்


காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பானம் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி எலுமிச்சை சேர்த்த பானம் அருதலாம். சீரக நீர் அருந்துவது நல்ல பலன் தரும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் சாறு கலந்து குடிக்கலாம். இதற்குப் பிறகு, குறைந்தது 1 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.


2. காலை உணவு


அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் காலை உணவு நமது டயட்டின் மிக முக்கியமான அங்கமாக (Health Tips) கருதப்படுகிறது. ஆரோக்கியமான காலை உணவுக்கு, சாம்பார் சட்னியுடன் சிறு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இட்லி- தோசை போன்ற புரோபயோடிக் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமா, ஓட்ஸ், உலர் பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை காலை உணவுக்கான சிறந்த தேர்வுகள். 


3. புரதம் நிறைந்த உணவுகள்


புரதம் இல்லாமல் எடை இழப்பு சாத்தியம் இல்லை. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, அனைத்து நேரங்களிலும்,டயட்டில் போதுமான புரத உணவுகளை சேர்ப்பது தசையை வலுப்படுத்தி கூடுதல் கலோரியை எரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதற்கு முட்டை, சோயா, பருப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.


4. மதிய உணவு 


மதிய உணவில் அரிசி மற்றும் கோதுமை உணவுகளில் அளவைக் குறைத்து, பருப்பு வகைகள், பருவகால காய்கறிகள், சிக்கன் மற்றும் மீன் ஆகியவற்றுடன் சாலட்டை உட்கொள்ள வேண்டும். ஒரு கப் சாதம் அல்லது 1 முதல் 2 சப்பாத்திகளை உட்கொள்ள வேண்டும். இதனால், உணவில் நார்சத்தும் குறையாமல் இருக்கும். செரிமானம் சிறப்பாக இருக்கவும் நார்சத்து அவசியம்.
 
மேலும் படிக்க | நோய்கள் எதுவும் உங்க பக்கம் வரவே வராது.. உத்திரவாதம் கொடுக்கும் சில மூலிகை டீ வகைகள்


இரவு உணவு 


மதிய உணவு மற்றும் காலை உணவுடன் ஒப்பிடும் போது இரவு உணவு எளிதில் ஜீரணிக்க கூடியதாக இருக்க வேண்டும். இரவு உணவில், பொங்கல், கிச்சடி ஐறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு பிடித்த காய்கறியுடன் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி மற்றும் தயிர் சாப்பிடலாம். இரவில், சப்பாத்தி,, சாதம் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறி அல்லது பருப்பு சூப் அருந்துவதும் பலன் தரும். மிக முக்கியமாக இரவு உணவை எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது. 


உடற்பயிற்சி


உடல் எடையை குறைக்க டயட்டை போலவே, உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியை தவறாமல் மேற்கொள்வது அவசியம். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதல்ல. உங்களால் முடிந்த எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


பொறுப்புத் துறப்பு: மேலே குறிப்பிட்டுள்ள உடல் எடையைக் குறைப்பதற்கான அனைத்து உதவிக்குறிப்புகளும் உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இருப்பினும், மருத்துவர் அல்லது நிபுணரிடம் கலந்தாலோசித்த பின்னரே உங்கள் உணவு மற்றும் தினசரி வழக்கத்தில் மாற்றங்களைச் செய்வது நல்லது. மேலும், உடலின் தன்மைக்கு ஏற்ப எடை இழக்கும் முயற்சிக்கான பலன்கள் வேறுபடும். 


மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ