தொப்பை கரைய வேண்டுமா; இந்த உணவுகள் அவசியம் டயட்டில் இருக்கட்டும்
தொப்பையை கரைப்பது உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதானது அல்ல. என்ன தான் பயிற்சி செய்தாலும், உணவைக் கட்டுப்படுத்தாமல் பலன் பெறுவது சாத்தியம் அல்ல.
தொப்பை கொழுப்பை எரிப்பது எப்படி: உடல் எடை அதிகரிப்பது என்பது இன்றைய வாழ்க்கை முறையில் பொதுவான பிரச்சனையாகி விட்டது. வயிற்றைச் சுற்றி இருக்கு கொழுப்பின் காரணமாக ஏற்படும் தொப்பை, நம் தோற்றத்தை குலைப்பதோடு, ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. இதனால், சிலருக்கு சங்கடமான நிலையும், தன்னம்பிக்கை குறைபாடும் ஏற்படலாம். ஆனால், இதற்கு உணவின் மூலம் சிறந்த தீர்வை காணலாம்.
உடல் பருமன் தான் பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு உடல் பருமன் தான் முக்கிய காரணம். இதனுடன், தொப்பை கொழுப்பு அதிகரிப்பதால் உடலின் ஒட்டுமொத்த தோற்றமும் கெட்டுவிடுகிறது. உங்களுக்கு மெலிதான இடை வேண்டும் என விரும்பினால், உங்கள் தினசரி உணவில் கண்டிப்பாக சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
தொப்பை கொழுப்பை குறைப்பது எப்படி?
இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு அதிகரிப்பதற்கு உள்ளுறுப்பு கொழுப்பு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக, உடலின் ஹார்மோன்கள் சமநிலையற்றதாக இருக்கும். இதற்கு சில தாவர உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை சாப்பிடுவதன் மூலம், தொப்பை கொழுப்பை கரைத்து மெலிதான இடையை பெறலாம்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
தொப்பை கரைய சாப்பிட வேண்டிய உணவுகள்
காய்கறிகள்: ப்ரோக்கோலி, கேரட், பச்சை காய்கறிகள், கீரை வகைகள்.
பழங்கள்: ஆரஞ்சு, பேரிக்காய், பெர்ரி, ஆப்பிள், வாழைப்பழங்கள்.
லீன் புரதங்கள்: கோழி, லீன் சிவப்பு இறைச்சி, பருப்பு வகைகள், மீன்.
தானியங்கள்: கினோவா, முழு கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ்.
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்: கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தயிர்.
ஆரோக்கியமான கொழுப்புகள்: ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், விதைகள், கொட்டைகள்.
உடற்பயிற்சியும் முக்கியம்
தொப்பையை குறைக்க, லேசான உடற்பயிற்சி செய்வதும் அவசியம், உடல் பயிற்சியை அதிகப்படுத்தினால், உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதனுடன், உணவில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR