எடை இழப்புக்கான டிப்ஸ்: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் காலையில் எழுந்தவுடன் டீ குடிக்க ஆசைப்படுவார்கள். இது தண்ணீருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் இரண்டாவது பானமாகும். இதில் சர்க்கரையும் இருப்பதால், எடை அதிகரிப்பதற்கு இதுவே பெரிதும் காரணமாக இருக்கிறது. உண்மையில், நம்மில் பலர் நாள் முழுவதும் பல முறை தேநீர் அருந்துகிறோம். இதனால் உடலுக்குள் செல்லும் சர்க்கரை கொழுப்பாக மாறத் தொடங்குகிறது. இதன் காரணமாக எடை படிப்படியாக அதிகரிக்கிறது. 


காலையில் தேநீருக்குப் பதிலாக சில ஆரோக்கியமான பானங்கள் அருந்தினால், உடல் எடை அதிகரிப்பதை நன்றாக கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பும் வேகமாக குறையும். 


இந்த பானங்களை காலையில் தேநீருக்கு பதிலாக குடிக்கலாம்: 


1. பிளாக் காபி 


தேநீர் இல்லாமல் உங்களுக்கு காலை வேளையில் புத்துணர்ச்சி கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பிளாக் காபி குடித்துப் பார்க்கலாம். இதில் சர்க்கரை இல்லை, ஆனால் காஃபின் இருப்பதால், நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணர ஆரம்பிக்கிறீர்கள். இந்த பானத்தால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.


2. இளநீர்


இளநீரில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நம்மை நீரேற்றமாக வைத்திருக்க இதை குடிக்கிறோம். அதில் கலோரிகள் மிகக் குறைவு. மேலும் அதன் நொதிகள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. இது எடையைக் குறைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Glowing Skin: சிகப்பான அழகைப் பெற மாதுளை பழம் போதும் 


3. ஆப்பிள் சைடர் வினிகர்


ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் சத்தான பானமாகும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இது ஆப்பிள் வினிகர் என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால், அவ்வப்போது ஆரோக்கியமற்ற துரித உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 


4. கிரீன் டீ


கிரீன் டீ எப்போதும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இதில் எபிகல்லோகேடசின் கேலேட் எனப்படும் ஆண்டி-ஆக்சிடெண்ட் உள்ளது. இது கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை க்ரீன் டீ சாப்பிடலாம்.


5. எலுமிச்சைப்பழச்சாறு 


எலுமிச்சம்பழ நீரை தொடர்ந்து குடிக்கவும். எனினும் அதில் சர்க்கரை சேர்க்காமல் பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு சுவை பிடித்தால், அதில் கருப்பு உப்பு சேர்க்கலாம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இது எளிதான மற்றும் மலிவான வழியாகும். இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.


(பொறூப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்கள் மிளகாய் தூளில் கலப்படமா? எப்படி தெரிந்து கொள்வது? இதோ டிப்ஸ்