உங்கள் மிளகாய் தூளில் கலப்படமா? எப்படி தெரிந்து கொள்வது? இதோ டிப்ஸ்

How to Identify Real Red Chilli Powder: தற்போதைய காலகட்டத்தில், கலப்படம் என்பது முன்பை விட அதிகரித்துள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் மிளகாய் பொடி கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 14, 2023, 02:41 PM IST
  • உண்மையான சிவப்பு மிளகாயை எவ்வாறு அடையாளம் காண்பது.
  • போலி சிவப்பு மிளகாய் பொடியை எப்படி கண்டுபிடிப்பது
உங்கள் மிளகாய் தூளில் கலப்படமா?  எப்படி தெரிந்து கொள்வது? இதோ டிப்ஸ் title=

உண்மையான Vs போலி சிவப்பு மிளகாய் தூள்: சிவப்பு மிளகாய் தூள் நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும், இந்த மசாலா பொருள் இல்லாமல் பல சுவையான உணவுகளை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது, இது காய்கறிகள், அசைவ உணவுகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் செரிமானத்துக்கு உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. எடைக்குறைப்பு சிகிச்சை, மலச்சிக்கல், உமிழ்நீர் சுரப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீராக வைப்பது போன்றவைகளுக்கு மிளகாய் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாரம்பரிய முறைப்படி,  சிவப்பு மிளகாயை வெயிலில் காயவைத்து, பொடி செய்து, சேமித்து வைத்து அடிக்கடி பயன்படுத்திய காலம் உண்டு. ஆனால் இப்போது  சந்தையில் கிடைக்கும் பாக்கெட் மிளகாய் பொடியைத்தான் பயன்படுத்துகிறோம். அப்படி நாம் பயன்படுத்தும் மிளகாய் தூள் கலப்படம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

இந்த பொருட்கள் சிவப்பு மிளகாய் தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது
சிவப்பு மிளகாய் தூள் மூலம் அதிக லாபம் ஈட்டுவதற்காக, பல வியாபாரிகள் அதை கடுமையாக கலப்படம் செய்கின்றனர். பொதுவாக இந்த மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்கள் பின்வருமாறு-

மேலும் படிக்க | என்ன செஞ்சாலும் சுகர் குறையலையா.. காலையில் வெறும் வயிற்றில் வெங்காய ஜூஸ் குடிங்க!

- செயற்கை நிறம்
- செங்கல் மரத்தூள்
- பழைய மற்றும் கெட்டுப்போன மிளகாய்
- சுண்ணாம்பு தூள்
- தவிடு
- சோப்பு
- சிவப்பு மணல்

இந்த தகவல் நமக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம்.  இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) சிவப்பு மிளகாய் தூளில் உள்ள கலப்படத்தை சோதிக்க பரிசோதனை முறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றி நீங்கள் கலப்படம் இல்லாத மிளகாய் தூளை தேர்வு செய்துக்கொள்ளலாம்.

1. இதற்காக நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு அதில் 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
3. சிவப்பு மிளகாயின் எச்சங்களை தண்ணீரின் மூலம் சரிபார்க்கவும்.
4. கைகளில் தேய்த்து, தோலில் கரடுமுரடானதாக உணர்ந்தால், அதில் செங்கல் தூள் கலந்துள்ளதை புரிந்து கொள்ளுங்கள்.
5. இந்தப் பொடி உங்கள் கைகளில் சோப்பு போல் மிருதுவாக இருந்தால், அதில் சோப்பின் தடயங்கள் கலந்திருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)

மேலும் படிக்க | எச்சரிக்கை!அளவிற்கு அதிகமான பப்பாளி உணவுக் குழாயை சுருக்கி விடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News